Electric Bus In Chennai : சென்னையில் படிப்படியாக மின்சார பேருந்துகள் வரப்போகின்றன

Electric Bus In Chennai - சென்னையில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்பட போகின்றன :

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆனது சென்னையில் உள்ள,

  • சென்னை சென்ட்ரல்-திருவான்மியூர்
  • பாரிமுனை-கோயம்பேடு
  • பாரிமுனை-தாம்பரம்
  • பாரிமுனை-கே.கே.நகர்
  • பாரிமுனை-பூந்தமல்லி
  • அடையாறு-தாம்பரம் (மேற்கு)

உள்பட 27 வழித்தடங்களில் 100 மின்சார பஸ்களை (Electric Bus In Chennai) இயக்க முடிவு செய்து 100 மின்சார பஸ்களை வாங்க டெண்டரை விடுத்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் விடுத்துள்ள டெண்டரில் வெற்றி பெறும் தனியார் நிறுவனமே மின்சார பஸ்களை இயக்குவதோடு, மட்டுமல்லாமல் அந்த மின்சார பஸ்களின் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த மின்சார பஸ் ஒன்றின் விலை ஆனது ரூ.1.2 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பஸ்கள் தொடர்ச்சியாக 8 மணி நேரம் இயங்கும் ஆற்றல் உடையவை ஆகும். அதன் பின்னர் 30 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் போதும் மீண்டும் பழையபடி இந்த மின்சார பஸ்கள் தொடர்ச்சியாக 8 மணி நேரம் இயங்கும்.

தற்போது சென்னையில் டீசலில் செயல்படும் பேருந்துகளே இயங்கி வருகின்றன. இந்த டீசலில் செயல்படும் பேருந்துகள் ஆனது சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் என்பதால் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து அரசு (Electric Bus In Chennai) ஆனது திட்டமிட்டுள்ளது. இனி வரும் காலங்களில் நாடு முழுவதும் படிப்படியாக மின்சார பேருந்துகள் தான் இயங்கும் என்ற நிலை வரப்போகிறது. மின்சாரத்தில் இயங்கும் கார்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள ஆனது பெட்ரோல் மற்றும் டீசலில்  இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நாட்டில் ஓடப்போகின்றன. இந்நிலையில் தற்போது படிப்படியாக சென்னையில் மின்சார பேருந்துகள் (Electric Bus In Chennai) வரப்போகின்றன. முதற்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மின்சாரத்தில் இயங்கும் 100 தாழ்தள குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பஸ்களை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

மின்சார பேருந்துகள் இயக்கப்படும் முக்கிய வழித்தடங்கள் :

சென்னை மாநகர போக்குவரத்து அரசு ஆனது சென்னையில் மின்சார பேருந்துகளை சென்னை சென்ட்ரல், பல்லவன் சாலை மற்றும் அடையாறு பணிமனையில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கும்.

  • பாரிமுனை-பூந்தமல்லி
  • அடையாறு-தாம்பரம் (மேற்கு)
  • திருவான்மியூர்-பெரம்பூர்
  • தியாகராயநகர்-திருப்போரூர்
  • திருவான்மியூர்-தாம்பரம்
  • சென்னை சென்ட்ரல்-திருவான்மியூர்
  • பாரிமுனை-கோயம்பேடு
  • பாரிமுனை-தாம்பரம்
  • பாரிமுனை-கே.கே.நகர்

உள்பட 27 வழித்தடங்களில் இந்த 100 மின்சார பேருந்துகள் ஆனது இயங்கப்போகின்றன.

மின்சார பேருந்துகளில் உள்ள நவீன வசதிகள் :

சென்னையில் ஓடப்போகும் மின்சார பேருந்துகளில்,

  • கண்காணிப்பு கேமரா
  • ஆட்டோமேட்டிக்காக பயணிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையிலான கதவுகள்
  • அகண்ட கண்ணாடி உடைய ஜன்னல்கள்
  • தீ அணைக்கும் கருவி
  • முதல் உதவி பெட்டகம்
  • 2+1 என்ற அடிப்படையில் 35 பேர் அமரும் வகையிலான இருக்கைகள்
  • 35 பேர் நின்றவாறு பயணம் செய்யும் இடவசதி உள்பட பல்வேறு வசதிகள் இந்த 100 மின்சார பேருந்துகளில் இடம் பெற்றிருக்கும்.

தனியார் நிறுவனம் ஆனது இந்த மின்சார பஸ்களை இயக்கினாலும் (Electric Bus In Chennai) டிக்கெட் வருவாய் ஆனது மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், இந்த மின்சார பஸ்களை பணி நேரத்தின் அடிப்படையில் பராமரித்து இயக்கும் தனியார் நிறுவனத்துக்கு நிலையான தொகை ஆனது வழங்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து அறிவித்துள்ளது. சென்னையில் பரீட்சார்த்த முறையில் இந்த மின்சார பஸ்கள் செயல்படுத்தப்படும். அதன் பின்னர் இந்த மின்சார பேருந்துகளை இயக்கும் திட்டம் மதுரை, திருச்சி மற்றும் கோவை உள்பட மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply