Electricity Tariff Hike In TN : தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது

மின் கட்டணத்தை ஜூலை 1 முதல் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு :

  • தமிழ்நாட்டில் விலையில்லா மின்சாரம் ஆனது 100 யூனிட் வரை அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும்.
  • அதைப்போல இலவச மின்சாரம் ஆனது குடிசை இணைப்புகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். கைத்தறி, விவசாயம், குடிசை, விசைத்தறி, தாழ்வழுத்த தொழிற்சாலைகள், வழிபாட்டு தலங்கள், ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் ஆனது தொடர்ந்து வழங்கப்படும்.

Electricity Tariff Hike In TN - தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு விளக்கம் :

  • மின் கட்டணம் 10 ரூபாய் உயர்வு – இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு.
  • மின் கட்டணம் 30 ரூபாய் உயர்வு – இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட் வரை பயன்படுத்தும் 35 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு.
  • மின் கட்டணம் 50 ரூபாய் உயர்வு – 400 யூனிட் வரை பயன்படுத்தும் 25 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு.
  • மின் கட்டணம் 80 ரூபாய் உயர்வு – 500 யூனிட் வரை மின் நுகர்வு செய்யும் 13 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு.
  • மின் கட்டணம் 30 ரூபாய் உயர்வு – இரண்டு மாதங்களுக்கு 22.36 லட்சம் சிறு வணிக மின் நுகர்வோருக்கு.
  • மின் கட்டணம் 40 பைசா உயர்வு – உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு உயர்வு.
  • மின் கட்டணம் 35  பைசா உயர்வு – உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு.
  • மின் கட்டணம் 20  பைசா உயர்வு – விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம். 1001 முதல் 1500 யூனிட் வரை மின் கட்டணம் 20 பைசா உயர்வை பெறும். 1500 யூனிட்டிற்கு மேல் மின் கட்டணம் 25 பைசா உயர்வை பெறும்.
  • சிறு, குறு தொழில் மின் நுகர்வோருக்கு யூனிட்டிற்கு மின் கட்டணம் உயர்வு 20 பைசா ஆகும்.

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்:

மின் கட்டண உயர்வுக்கான காரணங்கள் குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி விளக்கத்தில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பு 2011-12 ஆம் ஆண்டில் 18,954 கோடி ரூபாயாக இருந்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பு 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை 1,13,266 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பு, 10 ஆண்டுகளில் 94,312 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது. இதனால் நிதி இழப்பை ஈடுகட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது. கடன் தொகை 2011-12 ஆம் ஆண்டில் 43,493 கோடி ரூபாயாக இருந்தது, 10 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்து 1,59,823 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மின் நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழக அரசு நிதி இழப்பை ஈடுகட்ட ஆண்டுதோறும் சிறிய அளவில் மின் கட்டணம் அதிகரித்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply