Electronic Chip : உலகிலேயே முதல்முறையாக மனிதரின் மூளையில் சிப் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது

Electronic Chip :

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் Space X முதல் Open AI-ஐ வரை நவீன தொழில்நுட்ப யுகத்தின் பல்வேறு விஷயங்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Telepathy :

எலான் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் ஆனது ‘Telepathy’ என்ற கருவி ஒன்றை (Electronic Chip) கண்டுபிடித்துள்ளது. மனித மூளைக்குள் Electronic Chip ஒன்றை குறிப்பிட்ட பகுதியில் பொருத்தி விட்டால், அதன் மூலம் கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றை இயக்கும் வகையில் எலான் மஸ்க் நிறுவனம் புதிய சாதனை படைக்க முற்பட்டுள்ளது. இந்த முயற்சியானது வெறுமனே மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமின்றி, பல்வேறு பாதிப்புகளுக்கு தீர்வு காணும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனித மூளையின் குறிப்பிட்ட பகுதியில் Electronic Chip பொருத்தி விட்டால், மனிதர்கள் நினைத்தாலே கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றை இயக்கலாம். எந்தவிதமான உடல் ரீதியான தொடர்பும் இதற்கு தேவைப்படாது. எதையும் தொட வேண்டியது இல்லை. இதன் தொழில்நுட்ப அம்சங்களும், நன்மைகளும் மற்றும் பாதிப்புகளை குணப்படுத்தும் விதமும் ஆச்சரியப்பட  வைக்கும் விதமாக உள்ளது.

எலக்ட்ரிக் சிக்னல் வேலை செய்யும் விதம் :

மனித மூளையில் பொருத்தப்பட்ட Electronic Chip ஆனது படிப்படியாக அந்த நபரின் மூளை செயல்பாடுகளை எல்லாம் கவனிக்கும். மூளையில் வெளிப்படும் எலக்ட்ரிக் சிக்னல்களை லிங்க் கருவியில் உள்ள ஒயர்கள் அடையாளம் கண்டு, அதற்கேற்ப செயல்பாடுகளை முடுக்கி விடும். Link கருவியில் உள்ள ஒயர்களில் உள்ள நியூரல் ஸ்பைக்குகள் ஆனது  நியூரான்கள் எப்படி தகவல்தொடர்பை ஏற்படுத்துகிறதோ அதன்படி செயல்படுகின்றன. Link கருவி ஆனது மூளையில் வெளிப்படும் சிக்னல்களை Decode செய்கிறது. அதாவது, சிக்னல்களின் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ள Link கருவி ஆனது முயற்சி செய்யும். எந்தவிதமான செயலை மனிதர்கள் செய்ய விரும்புகிறார்கள், மற்றும் எந்த உணர்வை வெளிப்படுத்த விரும்புகிறார்கள் என Link கருவி ஆனது அலசும்.

Link கருவி ஆனது அலசி ஆராய்ந்த சிக்னல்கள் ஒயர்லெஸ் சிக்னல்களாக வெளியில் இருக்கும் கம்ப்யூட்டர் அல்லது செல்போன் அல்லது வேறு ஏதேனும் எலக்ட்ரிக் கருவிகளுக்கு அனுப்பும். எந்தவித உடல் ரீதியான தொடர்பும் இதற்கு தேவைப்படாது. மூளையில் உள்ள சிப்பில் இருந்து கிடைத்த சிக்னல்களை வெளியில் உள்ள கம்ப்யூட்டர் Decode செய்து, அதனை பல்வேறு அப்ளிகேஷன்களுக்கு அனுப்பும். உதாரணமாக கம்ப்யூட்டரில் உள்ள கர்சரை கட்டுப்படுத்தலாம் மற்றும் டிஜிட்டல் கருவிகளுக்கு சில கமாண்ட்களாக அவற்றை அளிக்கலாம். பல்வேறு ஒருமித்த மற்றும் மாறுபட்ட விஷயங்களை சிஸ்டம் இதிலிருந்து புரிந்து கொள்ளும். நியூரோ சிக்னல்களை காட்டிலும் துல்லியமான முறையில் ஒரு கட்டத்தில் தகவல் தொடர்பை ஏற்படுத்தும்.

அமெரிக்காவை சேர்ந்த நபரின் மூளையில் சிப் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது :

மனித தலையில் உள்ள மண்டை ஓட்டில் ஒரு அறுவை சிகிச்சையை செய்து ’Link’ எனப்படும் சிறிய சிப்பை (Electronic Chip) மூளையின் மத்தியில் பொருத்தி உள்ளனர். ‘Link’ எனப்படும் சிறிய சிப்பிலுள்ள சிறிய ஒயர்கள் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளுடன் மிகவும் கவனமாக இணைத்துள்ளனர்.

மூளை சிப்பின் மூலம் குணமாகும் சில நோய் பாதிப்புகள் பட்டியல் :

எலான் மஸ்க் நிறுவனம் கண்டுபிடித்துள்ள மூளை சிப்பின் மூலம் சில நோய்களும் மற்றும் சில உடல்நலப் பாதிப்புகளும் கூட சரியாகும்  என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குணமாகும் பாதிப்புகள் பட்டியல் :

  1. மன அழுத்தம்
  2. பார்கின்சன் நோய்கள்
  3. மோட்டார் நியூரான் நோய்கள்
  4. மூளையில் ஏற்படும் காயங்கள்
  5. எபிலெப்சி
  6. க்ரோனிக் வலி
  7. கண் பார்வை குறைபாடு
  8. காது கேளாத திறன்

Latest Slideshows

Leave a Reply