Elephant Foot Yam Benefits : கருணைக் கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மண்ணுக்கு அடியில் விளையும் காய்கறிகள் அனைத்தும் உடலுக்கு கேடு தரும் என்று அவற்றை ஒதுக்கிவிடுகிறார்கள். அதில், இந்த கருணைக்கிழங்கும் ஒன்று. ஆனால் எல்லாவற்றையுமே இப்படி தவிர்க்க தேவையில்லை என்கிறார்கள். கிழங்கில் சிறந்தது கருணைதான் என்கிறார்கள் பெரியோர்கள். இதன் மருத்துவ குணங்கள் (Elephant Foot Yam Benefits) தெரிந்ததால்தான், அன்றைய காலத்தில் வாரத்திற்கு 3 முறையாவது இந்த கிழங்கை சமைத்து சாப்பிடுவார்களாம். இந்த கருணைக் கிழங்கில் உள்ள மருத்துவ குணங்களை பார்ப்போம்.

Elephant Foot Yam Benefits - கருணைக் கிழங்கின் நன்மைகள் :

மூலநோய் :

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முழுமையாக குணமாக வேண்டுமானால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வரவும். மூலநோய்க்கு சிறந்த மருந்தாக இந்த கருணை இருந்து வருகிறது. பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைத்து வகை கிழங்கு வகைகளையும் தவிர்க்க வேண்டும். ஆனால், கருணைக் கிழங்கு மட்டும் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதேபோல், முடுக்குவாதம் உள்ளவர்களும், கருணைக் கிழங்கு மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என்பார்கள். வாதத்திற்கு 2 முறை கருணைக் கிழங்கு சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும். இந்தக் கிழங்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், பெரியவர்கள் தாராளமாகச் சாப்பிடலாம் என்கிறார்கள்.

ஆஸ்துமா :

ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த கிழங்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கிழங்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு. அதேபோல் சர்க்கரை நோய், இதய பிரச்சனை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிழங்கை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது. அதன்படி அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களும் கிழங்கை சாப்பிடலாமா என்று மருத்துவரை அணுக வேண்டும்.

உடல் எடை குறைக்க :

பொதுவாக உருளைக்கிழங்கு போன்ற நிலத்தடி கிழங்குகளில் அதிக அளவு மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் எடை கூடும் என்ற அச்சம் உள்ளது. ஆனால் கருணைக் கிழங்கைப் பொறுத்த வரை உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. மேலும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்க :

உணவில் கருணைக் கிழங்கை அதிக அளவு சேர்த்துக்கொண்டு உட்கொள்வதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கலாம். அஜீரண கோளாறுகளை நீக்குகிறது. செரிமான அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுகிறது. இது மூலநோயைக் குணப்படுத்தவும் உதவுகிறது. கருணை கிழங்கிற்கு பெருங்குடல் மற்றும் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் சக்தி உள்ளது.

உடல் சூட்டை தணிக்க :

கருணைக் கிழங்கிற்கு உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்விக்கும் ஆற்றல் உண்டு. உடலில் அதிக வெப்பம் இருப்பதால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கருணை கிழங்கிற்கு உண்டு. குறிப்பாக, நாள்பட்ட உடல் சூடு, மூல வெப்பம், எரிச்சல், அதிக காய்ச்சல் போன்றவற்றுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. பசியின்மையைப் போக்கவும், இரத்தத்தை சுத்தப்படுத்தவும் செய்கிறது.

அதிக உதிரப்போக்கு & மாதவிடாய் வலியை போக்க :

அதிகமான உதிரப்போக்கால் அவதிப்படும் பெண்களுக்கு கருணைக் கிழங்கு கை கொடுத்து (Elephant Foot Yam Benefits) உதவுகிறது. இரத்தப்போக்கு உட்பட மாதவிடாய் தொடர்பான அனைத்து வகையான கோளாறுகளையும் கருணைக் கிழங்கு குணப்படுத்துகிறது. குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கை, கால் பிடிப்புகள், தொடை, இடுப்பு மற்றும் உடல் வலிகளை போக்கும் சக்தி கருணைக் கிழங்கிற்கு உண்டு. உடல் சோர்வு, வலி மற்றும் பலவீனமான உணர்வு ஏற்படும்.

இதுபோன்ற தொந்தரவுகளை கருணைக் கிழங்கு போக்குகிறது. உடலையும் மனதையும் சோர்வடையாமல் வைத்திருக்க கருணைக் கிழங்கு உதவுகிறதது. எனவே மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கருணைக் கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி மற்றும் உடல் வலிகளில் இருந்து விடுபடலாம். இவ்வாறு பல்வேறு நன்மைகளை கொண்ட (Elephant Foot Yam Benefits) கருணைக் கிழங்கை சாப்பிட்டு பயன்பெறுங்கள்.

Latest Slideshows

Leave a Reply