Emerging Asia Cup 2023: வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடர்

ACC என்னும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் ஜூலை 13 முதல் 23 வரை நடைபெறவுள்ளது.

Emerging Asia Cup 2023 இரு பிரிவுகள் :

B பிரிவில் நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இந்தியா விளையாடுகிறது. அதேபோல், A  பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் டாப் இரு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். அரையிறுதிப் போட்டி ஜூலை 21ஆம் தேதியும், இறுதிப் போட்டி ஜூலை 23ஆம் தேதியும் நடைபெறும்.இந்தத் தொடர்கள் அனைத்தும் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ளது. வளர்ந்து வரும் வீரர்களுக்கான இந்த தொடரில் இந்திய ஏ அணியின் கேப்டனாக 19 வயதுக்குட்பட்டோருக்கான கேப்டன் யாஷ் துல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சனும் இந்திய ஏ அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த தொடரில் அபிஷேக் சர்மா துணை கேப்டனாக உள்ளார். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய இளம் வீரர் ரியான் பராக், பஞ்சாப் அணியில் இடம் பிடித்த பிரப்சிம்ரன் சிங், ராஜஸ்தான் அணியில் இடம் பிடித்த துருவ் ஜூரல் ஆகியோரும் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல், சி.எஸ்.கேயின் இளம் சிங்கங்களான நிசாந்த் சிந்து, ஆல்ரவுண்டர் ராஜ்வரதன் ஹங்கர்கேகர், ஆகாஷ் சிங் ஆகியோரும் இந்தத் தொடரில் இடம் பிடித்துள்ளனர். இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக சித்தான்ஷு கோடக், பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா ஏ அணி விவரம் :

சாய் சுதர்ஷன், அபிஷேக் ஷர்மா, நிகின் ஜோஷ், பிரதோஷ் ரான்சன் பால், யாஷ் துல், ரியான் பராக், நிசாந்த் சிந்து, பிரப்சிம்ரன் சிங், துருவ் ஜூரல், மானவ் சுதர், யுவராஜ்சின் தோத்தியா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ராஜவர்த்தனே ஹங்கர்கேகர்,

கூடுதல் வீரர்கள் :

ஹர்ஸ் துபே, நேஹல் வதேரா, ஸ்நேல் பட்டேல், மோஹித் ரெட்கர்

Latest Slideshows

Leave a Reply