Emerging Player Ravindra : சிறந்த அறிமுக வீரருக்கான விருதை தட்டிச் சென்ற ரச்சின் ரவீந்திரா

துபாய் :

ஐசிசி தரப்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த இளம் வீரருக்கான விருதினை இந்த வருடம் நியூசிலாந்து அணியின் அறிமுக வீரர் ரச்சின் ரவீந்திரன் (Emerging Player Ravindra) வென்று அசத்தி உள்ளார். ஐசிசியின் சிறந்த வீரர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அனைத்து 3 வடிவங்களுக்கும் கூடுதலாக, சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த டி20 கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், சிறந்த ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த அறிமுக வீரர் விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்படும். இதற்கான பரிந்துரை பட்டியல் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்திய அணியின் இளம் வீராங்கனை யாஷ்வி ஜெய்ஸ்வால், நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வீரர் ஜெரால்ட் கோட்சே மற்றும் இலங்கை அணியின் இளம் வீரர் சிறந்த அறிமுக வீரருக்கான பரிந்துரை பட்டியலில் தேர்வு செய்யப்பட்டனர்.

ரசிகர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நியூசிலாந்தின் இளம் நட்சத்திரம் ரச்சின் ரவீந்திரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், மதுஷங்கா, கோட்ஷியே ஆகியோரை வீழ்த்தி சிறந்த அறிமுக வீரருக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 3 சதம், 3 அரைசதங்களுடன் 578 ரன்கள் குவித்தார். அதேபோல், கடந்த ஆண்டில் மட்டும், ஒருநாள் போட்டிகளில் 820 ரன்கள் மற்றும் 18 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 91 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளையும், மொத்தம் 911 ரன்கள் மற்றும் 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மற்ற வீரர்களை விட நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு ரச்சின் ரவீந்திராவின் பங்களிப்பு அதிகம்.

Emerging Player Ravindra :

ஐசிசி விருது பெற்ற மகிழ்ச்சி குறித்து ரச்சின் ரவீந்திரா கூறுகையில் (Emerging Player Ravindra), ஐசிசி விருதை வென்றது தனி உணர்வு. ஏனெனில் ஐசிசி போன்ற சிறந்த மையங்கள் எங்கள் ஆட்டத்தை பாராட்டியது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த ஆண்டு சிறப்பான பயணம். பல்வேறு சவாலான சூழ்நிலைகளில் அதிக அளவில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். அவருக்கு சிஎஸ்கே ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply