Whatsapp ரூட்டில் EMIS Website - தமிழக பள்ளிக் கல்வித்துறை Data

Whatsapp ரூட்டில் EMIS Website - தமிழக பள்ளிக் கல்வித்துறை டேட்டாவில் புதுசா மாற்றம் :

கல்வி அமைச்சகம் கல்வியை சிறப்பாக நிர்வகிப்பதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை ஆனது தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் தகவல்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் (EMIS – Educational Management Information System) மூலம் ஆன்லைனில் பராமரித்து வருகிறது. இந்த EMIS மூலம் கல்வி முறையின் பல்வேறு கூறுகளை தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை ஆனது மேம்படுத்துகிறது. ஒவ்வொரு மாணவரின் பிறந்த தேதி, தற்போது பயிலும் வகுப்பு, பெற்ற மதிப்பெண்கள், கற்றல் மதிப்பீடு, கற்பித்தல் நடவடிக்கைகள், சான்றிதழ்கள், பெற்றோரின் தொலைபேசி எண், உள்ளிட்ட தகவல்கள் ஆனது இந்த EMIS-ல் இடம் பெற்றிருக்கும். இந்த EMIS ஆனது குறிப்பிட்ட இடைவெளியில் புதிய கற்றல் தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் கொண்டு அப்டேட் செய்யப்படும். பள்ளி மாணவ, மாணவிகளின் தகவல்களை சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இதனை மேலாண்மை செய்து உறுதி செய்வர். தற்போது இந்த எமிஸ் தகவல்களை பதிவேற்றம் செய்தல், திருத்துதல் மற்றும் பதிவிறக்கம் செய்தல் போன்ற செயல்பாடுகளுக்காக தனியாக ஒரு இணையதளம் (EMIS Website) ஆனது செயல்பட்டு வருகிறது.

EMIS Website :

தற்போது சுமார் 1.16 கோடி மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி எண்கள் ஆனது பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் தேவையற்ற எண்கள் பலவும் இருப்பதாக தெரிகிறது. இந்த பயன்படுத்தப்படாத எண்கள் பல்வேறு சிரமங்களை அளித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் கூறுகின்றனர். பயனற்ற எண்களை நீக்கினால் வேலைப்பளு குறைந்துவிடும். எனவே பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இதற்கான வேலைகளில்  ஈடுபட்டு வருகின்றனர்.

Checking Telephone Numbers :

தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆனது இது வரை 5 லட்சம் தொலைபேசி எண்களை Checkup செய்துள்ளது. மீதமிருக்கும் தொலைபேசி எண்களை அடுத்த சில வாரங்களில் Checkup செய்து முடிக்க வேகம் காட்டி வருகின்றனர். அனைத்து தொலைபேசி எண்களையும் Checkup செய்து முடிவடைந்ததும் பெற்றோர்கள் உடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை ஆனது  ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுக்க உள்ளது.

WhatsApp Communication Facility :

இதற்காக பள்ளிக் கல்வித்துறை Department Of School Education என்ற பெயரில் புதிய தளம் ஒன்று (EMIS Website) தொடங்குகிறது. ஒருமுறை தகவலை வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்தால் பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி தொலைபேசி எண்களின் வாட்ஸ்-அப்பிற்கு தகவல் சென்றடைந்துவிடும் வகையில் இருக்கும். பள்ளிக் கல்வித்துறை இதற்கான தொழில்நுட்ப வசதிகளை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை 12 நாட்களில் முழுமையாக இந்தப் பணிகளை முடித்துவிட திட்டமிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை வாட்ஸ்-அப் மூலம் (EMIS Website) பெற்றோர்கள் உடனான தகவல் தொடர்பை மிகவும் எளிமையாக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply