Employees Deposit Linked Insurance : EDLI காப்பீட்டு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

ஊழியர் வருங்கால வைப்புநிதியில் உள்ள முக்கியமான திட்டம் தான் Employees Deposit Linked Insurance (EDLI) ஆகும். ஊழியர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் (EPFO), உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் வரை காப்பீடு (EPF Insurance) ஆனது வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்கள் காப்பீட்டை பெற பிரீமியம் எதுவும் தனியாக செலுத்த தேவையில்லை. அடிப்படை சம்பளம் ரூ.15,000-க்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை காப்பீடு ஆனது வழங்கப்படும். EPF உறுப்பினர்களின் முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி மாத ஊதியத்தை விட 35 மடங்கு அதிகமாக இந்த காப்பீட்டு தொகையானது வழங்கப்படுகிறது. அதாவது அதிகபட்சமாக இந்த காப்பீட்டு தொகையானது ரூ.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

இந்த Employees Deposit Linked Insurance திட்டத்தில் ரூ.1,15,000 ஆக வழங்கப்பட்டு வந்த போனஸ் தொகை கடந்த ஏப்ரல், 2023 மாதம் முதல் ரூ.1,75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Provident Fund – ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை ஆனது பிடித்தம் செய்யப்பட்டு அந்த தொகை ஆனது ஊழியர்களின் PF கணக்கில் வரவாக வைக்கப்படும். பணத்துக்கான தேவைகள் ஏற்படும் முக்கிய சமயங்களில் ஊழியர்கள் இந்த பணத்தை தங்களது தேவைகளுக்காக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்படாத பட்சத்தில் ஊழியர் தனது பணிக்காலம் முழுவதும் PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்காமல், பணி ஓய்வுக்கு பிறகு மொத்தமாக ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டம் ஆனது ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஊழியர்களுக்கு Employees Deposit Linked Insurance வழங்கும் நன்மைகள் :

  • வயது மற்றும் பதவியைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஊழியர்களும், காப்பீடு செய்யலாம். விதிவிலக்குகள் ஆனது இல்லை.
  • ஊழியர் காப்பீடு செய்யப்பட்ட பணியில் இருக்கும் போது மரணமடைந்தால், அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த EDLI திட்டத்தின் கீழ் இலவச ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள்.
  • வேலையாட்கள் வெளிநாட்டில் மரணமடைந்தாலும், அந்தக் குடும்பத்திற்கு இந்த EDLI திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
  • வேலை வழங்குபவர் இந்த Employees Deposit Linked Insurance திட்டத்தில் மாதத்திற்கு குறைந்தபட்ச பங்களிப்பாக ரூ.75 செலுத்துகிறார், ஆனால் நாமினிக்கு வழங்கப்படும் அதிகபட்ச உறுதிசெய்யப்பட்ட பலன் ஆனது குறிப்பிடத்தக்கது, அதாவது ரூ.7 லட்சம் வரை. குறைந்தபட்ச கவரேஜ் தொகை ஆனது ரூ.2.5 லட்சம் ஆகும்.

EDLI - உரிமைகோரலை தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் :

ஊழியரின் நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசு Employees Deposit Linked Insurance திட்டத்தின் கீழ் உரிமைகோரலைப் பதிவு செய்ய, பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  • படிவம் 5 IF உரிமைகோரியவரால் முறையாக நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
  • ஊழியரின் இறப்புச் சான்றிதழ் ஆனது இறப்பிற்கான காரணத்தையும், கோரிக்கை உண்மையானதா என்பதையும் கண்டறிய சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இறந்த பணியாளரின் சட்டப்பூர்வ வாரிசு மூலம் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தால் வாரிசு சான்றிதழ் ஆனது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply