Empress Wu Zetian Of China : சீனாவின் பேரரசி வூ ஜெடியன் உலகின் மகா பணக்கார பெண்மணி

உலகில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பெரும்பாலும் பெண்களின் பெயர் இல்லை என்றபோதும் ஒரு காலத்தில் அதில் ஒரு பெண்ணின் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த உலகின் மிகப்பெரிய பணக்காரப் பெண் என்று பேரரசி வூ ஜெடியன் (Empress Wu Zetian Of China) அறியப்படுகிறார். காலங்கள் பல கடந்தாலும் அதிக சொத்து படைத்த பணக்காரர்களில் தனியொரு பெண்ணாக பேரரசி வூ ஜெடியன் இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறார். சீனாவின் பேரரசி வூ ஜெடியன் (Empress Wu Zetian Of China) மொத்தம் 16 டிரில்லியன் டாலர் சொத்துகளுக்குச் சொந்தக்காரர் ஆவார். பேரரசி வூ ஜெடியனை மக்கள் அனைவரும் ‘பேரரசி வூ’ என்று அழைப்பார்கள்.

இந்த உலகின் மிகவும் பணக்காரப் பெண் என்று ‘பேரரசி வூ’ அறியப்படுகிறார். இந்திய மதிப்பில் இவரது மொத்த சொத்து மதிப்பு 1,33,00,24,00,00,00,000 கோடி ஆகும் (பதிமூன்று லட்சத்து முப்பதாயிரத்து 24 கோடி கோடி). டாங்க் சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த பேரரசி வூவின் சொத்தானது உலகின் மிகப்பெரிய பணக்காரர்களான எலான் மஸ்க்கின் 229 பில்லியன் டாலர்கள், ஜெப் பேசோஸின் 174 பில்லியன், முகேஷ் அம்பானியின் 106.2 பில்லியன், அதானி மற்றும் ஜெப் பேசோஸ் உள்ளிட்டவர்களின் சொத்துகளை சேர்த்தாலும் கூட அவற்றைக் காட்டிலும் பெரிதாக அதிகமாக வருகிறது.

Empress Wu Zetian Of China - டாங் வம்சத்தின் பேரரசி வூ ஜெடியன் வாழ்க்கை குறிப்பு :

பேரரசி வூ ஜெடியன் 624 AD ஆண்டில் ஷாங்க்சி மாகாணத்தில் ஒரு வளமான குடும்பத்தில் பிறந்தார். டாங்கின் பேரரசர் காசோங் லி யுவானைத் பேரரசி வூ ஜெடியன் திருமணம் செய்து கொண்டார். டாங்கின் பேரரசர் காசோங் லி யுவானின் உடல்நிலை மோசமடைந்த பிறகு பேரரசி வூ ஜெடியனின் கைகளுக்கு அதிகாரம் வந்தது. கிபி 655க்குப் பிறகு அப்பேரரசைக் கைப்பற்ற பேரரசி வூ ஜெடியன் தொடங்கினார். அப்பேரச  அதிகாரத்தை கைப்பற்ற பேரரசி வூ ஜெடியன் அரச குடும்பத்தைச் சேர்ந்த 12 உறுப்பினர்களைக் கொன்று குவித்தார் என்று கூறப்படுகிறது. சீன வரலாற்றில் பேரரசி வூ ஜெடியன் (Empress Wu Zetian Of China) முதல் மற்றும் ஒரே பெண் பேரரசியாக 665 கிபி முதல் 705 கிபி வரை டாங் வம்சத்தின் ஆட்சியாளராக இருந்துள்ளார். டாங் வம்சத்தின் முதல் பேரரசியாக வூ ஜெடியன் இருந்தார். அசாதாரணமான புத்திசாலித்தனம், அரசியலில் கூர்மையான திறன் மற்றும் அதீத லட்சியம் ஆகியவற்றுடன் பேரரசி வூ ஜெடியன் பதினைந்து ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.

தனது அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக  பேரரசி வூ ஜெடியன் (Empress Wu Zetian Of China) பல்வேறு உத்திகளை கையாண்டு திறம்பட இருந்ததாக வரலாற்று நிபுணர்கள் வருணிக்கின்றனர். தனது நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பேரரசி வூ ஜெடியன் சொந்த பிள்ளைகளையே கொன்று குவித்ததாகவும் கூறப்படுகிறது. பேரரசி வூ ஜெடியன் 15 ஆண்டுகாலம் ஆட்சி செய்துள்ளார். அப்போது பேரரசி வூ ஜெடியனின் சீனப் பேரரசு ஆனது மத்திய ஆசியா வரை விரிவடைந்துள்ளது. பேரரசி வூ ஜெடியனின் ஆட்சிக்காலத்தில் சீன பொருளாதாரம் ஆனது தேயிலை, பட்டு வர்த்தகத்தின் மூலமாக செழித்து விளங்கியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply