Empuraan Movie Review : மோகன்லாலின் எம்புரான் திரைப்பட விமர்சனம்

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தின் விமர்சனங்களை (Empuraan Movie Review) தற்போது பார்க்கலாம்.

எம்புரான்

மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமான மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கியுள்ள படம் எம்புரான். இந்தப் படம் 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் (Empuraan Movie Review) வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மோகன்லால் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி  வருகின்றனர். முன்பதிவுகளில் மட்டும் ஒரே நாளில் 50 கோடிக்கு மேல் வசூலித்து எம்பூரான் சாதனை படைத்துள்ளது. இந்தத் தொகுப்பில், எம்புரான் படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் படம் பற்றிய தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தை பற்றிய விமர்சனங்களை தற்போது பார்க்கலாம்.

Empuraan Movie Review - Platform Tamil

எம்புரான் படத்தின் விமர்சனம் (Empuraan Movie Review)

முதல் பகுதி மோகன்லால் தான் சர்வதேச கடத்தல் மாஃபியா குரேஷி ஏப்ரகாம் என்று தெரிவதோடு (Empuraan Movie Review) முடிகிறது. இப்போது, ​​அவரது சொந்த ஊரான கேரளாவில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடி ஏற்படும்போது, ​​மோகன்லால் அதை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதுதான் எம்புரான் படத்தின் கதை.

படத்தின் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் உலகத் தரம் வாய்ந்தவை என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். கதை மற்றும் கதாபாத்திரங்களை உருவாக்கவே படம் முழு முதல் பாதியை எடுத்துக்கொள்கிறது. இடைவேளை பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்றும் (Empuraan Movie Review) தெரிவிக்கின்றனர். எம்புரான் படத்தில் மோகன்லால் நடிக்கும் மொத்த காட்சிகள் 40 நிமிடங்கள் மட்டுமே என்று படக்குழு முன்பே அறிவித்திருந்தது. படம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மோகன்லால் உள்ளே நுழைகிறார். மோகன்லாலின் அறிமுகக் காட்சிக்காக தியேட்டரில் எல்லா பக்கங்களிலிருந்தும் விசில் பறக்கிறது.

மெதுவாக செல்லும் முதல் பாதியைத் தொடர்ந்து, இரண்டாம் பாதி அதிரடியை நோக்கி நகர்கிறது. எம்புரான் படத்திற்காக முரளி கோபி அரசியலை மையமாகக் கொண்ட மிகத் தெளிவான திரைக்கதையை எழுதியுள்ளார். படத்தின் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் மிக உயர்ந்த தரத்தில் உள்ளன. ஆனால் பிருத்விராஜின் இயக்கம் ரசிகர்களை கொஞ்சம் (Empuraan Movie Review) அதிருப்தி அடையச் செய்துள்ளது என்று கூறலாம். சில ரசிகர்கள் அவர் ஹாலிவுட் படங்களின் வழக்கமான கதை சொல்லும் பாணியைப் படத்தில் பின்பற்றியிருப்பதாகவும், அதில் தனித்துவமாக குறிப்பிடத்தக்கது என எதுவும் இல்லை என்றும் கருதுகிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply