England vs Australia: நான்காவது டெஸ்டில் களமிறங்கும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா...

ஆஷஸ் தொடர் :

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். நம் நாட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை போன்று மிகவும் வெறித்தனமாக நடைபெறும். இதில் பெரும்பாலும் எந்த நாட்டில் போட்டி நடக்கிறதோ அந்த அணியை வெற்றி பெறும். கடந்த ஆண்டில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் அபார வெற்றி பெற்றது. இந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் ஏற்கனவே மூன்று போட்டியில் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. கடந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று பழைய பார்முக்கு திரும்பியது.

அடுத்தடுத்து இரண்டு தோல்விகள் மூலம் துவண்டு போன இங்கிலாந்து அணி ஆனாலும் பேஸ் பால் திட்டத்தை கைவிடவில்லை. வெற்றியோ தோல்வியோ எங்கள் திட்டத்தில் மாற மாட்டோம் என கேப்டன் பென் ஸ்டாக்ஸ் கூறியுள்ளார். அதேபோன்று கடந்த போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்ற ஆவலாக உள்ளது. இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு :

ஏற்கனவே லயன் காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் போனது ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பின்னடைவாகும். கடந்த போட்டியில் அவருக்கு பதிலாக விளையாடிய மார்பி சரியாக விளையாடாததால் அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்பின்னர்கள் இல்லாமல் ஆடப்போகிறது. கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த பவுலர் இந்த போட்டியில் களம் இறங்கியுள்ளார்.

இங்கிலாந்து அணியை பார்த்தால் மோயின் அலி மூன்றாவது வீரராக களம் இறக்கப்பட உள்ளார். அவர் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். இங்கிலாந்தின் நட்சத்திர பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளது பெரிய பலத்தை ஏற்படுத்தும். இதனால் நான்கு பாஸ்ட் பவுலர் மற்றும் ஒரு ஸ்பின்னர் என இங்கிலாந்த அணி கம்பீரமாக உள்ளது. இதனால் சம பலம் வாய்ந்த இந்த அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply