EOS-08 Satellite-ன் செயற்கைகோளின் முதன்மை நோக்கம்

Primary Mission Of EOS-08 Satellite :

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-08 ஆனது 32 மீட்டர் உயரம் மற்றும் சுமார் 175 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. வானிலை ஆராய்ச்சி மற்றும் புவி கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி EOS-08 செயற்கைக்கோளை (EOS-08 Satellite) ISRO நிறுவனம் சிறியரக SSLV D-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 9.17 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது.

அதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி செயற்கைகோள் ஏவப்பட்ட 13 நிமிடம் 30 விநாடிகளில் SSLV Rocket மூலம் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக ISRO அறிவித்துள்ளது. மேலும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் எஸ்ஆர் டெமோசாட் என்ற 200 கிராம் எடைகொண்ட சிறிய சோதனை செயற்கைகோளும் அதனைத் தொடர்ந்து அடுத்த 3வது நிமிடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து 475 கி.மீ தொலைவில் உள்ள புவி வட்டப்பாதையில் இந்த இரண்டு செயற்கைகோள்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

EOS-8 செயற்கைகோளின் முதன்மை நோக்கம் :

EOS – 8 செயற்கைகோளின் முதன்மை நோக்கம் ஆனது,

  • மைக்ரோ சாட்டிலைட்டை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல் (செயற்கைக்கோளுக்கு ஏற்ப ஆராய்ச்சி கருவிகளை உருவாக்குவது).
  • மைக்ரோசாட்டிலைட் பஸ்ஸுடன் இணக்கமான பேலோட் கருவிகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தில் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைத்தல்.
  • கணிப்பொறி தொழில்நுட்பங்களுடன் நுண் செயற்கைக்கோள்களை வடிவமைப்பது மற்றும் உருவாக்குவது ஆகியவை ஆகும்.

EOS – 08 செயற்கைக்கோளில்,

  • Electro-Optical Infrared Payload (EOIR) – எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இஓஐஆர்).
  • Global Navigation Satellite System-Reflectometry Payload (GNSS-R) – குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜிஎன்எஸ்எஸ்-ஆர்).
  • SIC UV Dosimeter – எஸ்ஐசி யுவி டோசிமீட்டர்

ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணைக்கப்பட்டுள்ள கருவிகளின் செயல்படுத்தப்படும் திறன் ஆனது ஒரு ஆண்டாகும்.  இந்த செயற்கைகோளில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த EOS-08 செயற்கைகோளில் உள்ள GNSS – R  கருவி ஆனது,

  • மண்ணின் ஈரப்பதம்
  • கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு
  • நீர்நிலைகளை கண்டறிதல்
  • இமயமலை பகுதிகளில் பனிப்பொழிவு
  • வெள்ள தடுப்பு

ஆகியவற்றை கண்காணித்து தரவுகள் (Messages) சேமிக்கும் மற்றும் அவை தொடர்பான தகவல்களை பூமிக்கு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஆனது எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்து அதிக அளவில் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

Latest Slideshows

Leave a Reply