EPFO Board Meets : மத்திய ஓய்வூதியக் கட்டண முறைக்கு ஒப்புதல் அளிக்க EPFO வாரியம் கூடுகிறது

EPFO ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு 2024 – 2025 நிதியாண்டின் முதல் கூட்டத்தை வரும் நவம்பர் 23 ஆம் தேதி (EPFO Board Meets) அன்று நடத்துகிறது. மத்திய ஓய்வூதியக் கட்டண முறைக்கு ஒப்புதல் அளிக்க EPFO ​​வாரியம் நவம்பர் 23 அன்று கூடுகிறது.

ஓய்வூதியதாரர்களுக்கு 2025 புத்தாண்டு பரிசு ( EPFO Board Meets )

லட்சக்கணக்கான EPS Pension உறுப்பினர் அனைவருக்கும் CPPS புதிய ஓய்வூதிய முறை மூலம் ஜனவரி 2024 முதல் ஒரு நல்ல மிகப்பெரிய நிவாரணம் கிடைக்க உள்ளது. இனிமேல் EPFO அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் (EPFO Board Meets ) தங்கள் ஓய்வூதியத்தை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் வங்கிகளின் கிளைகளிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்றாலும், மேலும் அவர்களது வங்கி அல்லது கிளையை மாற்றினாலும், அவர்கள்  தங்களது ஓய்வூதியம் செலுத்தும் ஆணையை (PPO – Pension Payment Order) ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம்  கிடையாது. குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த புதிய வசதி ஆனது மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.

CPPS அமைப்பு இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. ஒருங்கிணைக்கப்பட்ட EPFO ​​போர்ட்டலின் வேகம் 30% உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் வன்பொருள் மேம்படுத்தலுடன் மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதி (EPFO Board Meets ) ஆனது ஜனவரி 1, 2025 முதல் அமுல் படுத்தப்பட உள்ளது. இந்த புதிய செயல்முறை மூலமாக 78 லட்சத்திற்கும் அதிகமான EPS Pensioners பயனடைவார்கள்.

Latest Slideshows

Leave a Reply