ESIC Recruitment : ரூ.45,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

ESIC Recruitment : ESIC கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு. மாதம் ரூ.45,000/- வரை சம்பளம் பெற நண்பர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள். தமிழ்நாட்டில் உள்ள ESIC கார்ப்பரேஷனில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 15 ஆம் தேதி வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ESIC Recruitment 2023 - அரசு பணி :

நிறுவனம்: ESIC

பணியிடம்: தமிழ்நாடு

பணியிட விவரம்:

  • ஜூனியர் இன்ஜினியரிங் (சிவில்)
  • ஜூனியர் இன்ஜினியரிங் (எலக்ட்ரிக்கல்)
  • மொத்த காலிப்பணியிடங்கள்: 60

கல்வித் தகுதி: இந்தப் பணிகளுக்கு (ESIC Recruitment) விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் பட்டம் / டிப்ளமோ / எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தப் பணிகளுக்கு (ESIC Recruitment) விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 62-க்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: இந்தப் பணிகளுக்குத்  தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.33,000/- முதல் ரூ.45,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: ESIC Recruitment – விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணிக்கு (ESIC Recruitment) தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.esic.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அவற்றைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15/12/2023

Latest Slideshows

Leave a Reply