European Nations to Invest in India: ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து இந்தியா இந்த புதிய வர்த்தக ஒப்பந்தம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்கு வகிக்காத சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லைகென்ஸ்டைன் ஆகிய நான்கு நாடுகளுடன் இணைந்து இந்தியா புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2018 நவம்பரில் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள்  கடந்து தற்போது நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த வர்த்தக ஒப்பந்தம் ஆனது கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு மொத்தம் 21 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

European Nations to Invest in India:

சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லீச்டென்ஸ்டைன் ஆகிய நாடுகள் இணைந்து இந்த புதிய  வர்த்தக ஒப்பந்தம் மூலம் 133 பில்லியன் வெள்ளி முதலீடு செய்ய உள்ளன. அடுத்த 15 ஆண்டுகளில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு  வேலைவாய்ப்புகளை உருவாகும் எனக் கூறப்படுகிறது. ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட நான்கு நாடுகளில், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சுவிட்சர்லாந்து நாடு உள்ளது. 2022-23ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஆனது 17.14 பில்லியன் டாலராக இருந்தது. இந்த நான்கு நாடுகளுடனான ஒருங்கிணைந்த வர்த்தகம் 2022-23ஆம் ஆண்டில் 18.66 பில்லியன் டாலராக இருந்தது. எனவே  சுவிஸ் அரசு தற்போது கையெழுத்தாகியுள்ள இந்தப் புதிய ஒப்பந்தத்தை ஒரு மைல்கல் என்று கூறியுள்ளது.

இந்த புதிய வர்த்தக ஒப்பந்தம் ஆனது ஏற்றுமதி, இறக்குமதியை இடையூறின்றி மேற்கொள்வதற்கான வர்த்தக உடன்படிக்கையின் அடிப்படையில் உள்ள ஒரு பெரிய ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் முதலீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவின் 140 கோடி மக்களின் சந்தைக்கு ஐரோப்பிய நாடுகளின் பதப்படுத்தப்பட்ட உணவு, பானங்கள், மின்னணு இயந்திரங்கள் எளிதாக வரும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய நாட்டின் இளைஞர்களுக்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஆனது நல்ல வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா பெரும் முதலீட்டைப் பெறும்” என்று அறிக்கை வெளியிட்டார். மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், “இந்தியாவிற்குள்  இந்த முதலீடு 15 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வரும்” என்று தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply