Export Of Fig Juice To Poland : அத்திப்பழ ஜூஸ் இந்திய புவிசார் குறியீடுடன் போலந்துக்கு ஏற்றுமதி

Export Of Fig Juice To Poland :

உலக சந்தையில் இந்திய விவசாய உற்பத்தி பொருட்களுக்கு நல்ல வரவேற்பு ஆனது ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து தனித்துவமான விவசாய உற்பத்திப் பொருட்கள் உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதற்கு அத்திப்பழ ஜூஸ் போலந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது (Export Of Fig Juice To Poland) சிறந்த எடுத்துக்காட்டு என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற விவசாய உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் ஆனது எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.

உடனடியாக அருந்தக்கூடிய அத்திப்பழ ஜூஸ் ஆக ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது :

  • புரந்தர் அத்திப் பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்தச் சாறு, ‘Ready-To-Drink’ எனப்படும் உடனடியாக அருந்தக்கூடிய தயார் நிலையில் உள்ள ஜூஸ் வகையாக ஏற்றுமதி (Export Of Fig Juice To Poland) செய்யப்படுகிறது. இந்தியா முதல்முறையாக அத்திப் பழ ஜூஸை ஏற்றுமதி செய்துள்ளது.
  • இது நாட்டின் தனித்துவமான வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதி ஆகும் என்று வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஆனது தெரிவித்துள்ளது.
  • இந்த புவிசார் குறியீடு ஆனது சட்டப்பாதுகாப்பு தருவதுடன், மற்றவர்களின் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டை தடுக்கிறது. இந்த புவிசார் குறியீடு ஏற்றுமதி செய்யப் பயன்படுகிறது.

Nutritional Benefits Of Athipalam :

  • அத்திப் பழத்தில் உள்ள சத்துகள் (1 பழம் = 50gm)
  • பொட்டாசியம் – 3.3%
  • நார்ச்சத்து – 5.8%
  • விட்டமின் B6 – 3%
  • மாங்கனீசு – 3%
  • கலோரி(37) – 2%

  • அத்திப் பழத்தில் பொட்டாசிய சத்தும் மற்றும் நார்ச் சத்தும் அதிகம் உள்ளது. பொட்டாசிய சத்து ஆனது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், நார்ச் சத்து ஆனது உடல் பருமனை குறைக்கும். இதில் உள்ள அதிக அளவு கால்சிய சத்து எலும்பு திடமாக இருக்க உதவும்.
  • வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஊட்டச்சத்து ஆனது ஆரோக்கியமான ஊக்கத்தை அளிக்கிறது. கர்ப்பமாக இருக்கும்போது, அம்மா மற்றும் குழந்தை இருவருக்கும் அத்திப்பழ ஜூஸ் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது.
  • Chlorogenic Acid அத்திபழத்தில் உள்ளதால் BP & DM கட்டுப்படுத்துகிறது.
  • அத்திப்பழங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜூஸ் ஆனது வொர்க்அவுட்டிற்குப் பிறகு புத்துணர்ச்சியூட்டும்.
  • அத்திப்பழ ஜூஸ் ஆனது சாலட், ஜாம், கேக், ஐஸ்கிரீம், சான்ட்விச், ஸ்வீட், சூப் ஆகியவை தயாரிப்பதில் பயன்படுகிறது.
  • எலும்புகள், தசைகள் மற்றும் பற்கள் மற்ற உறுப்புகளின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.
  • இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தும் மற்றும் மலச்சிக்கலைக் குறைக்க பயன்படுகிறது.

முதன்முறையாக இந்தியாவில் இருந்து போலந்து நாட்டிற்கு புவிசார் குறியீடு பெற்ற அத்திப்பழச்சாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக (Export Of Fig Juice To Poland) மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. இந்த அத்திப் பழ ஜூஸ் ஏற்றுமதி நாட்டின் தனித்துவமான வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதி ஆகும் என்று வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஆனது தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply