மாணவ, மாணவிகளுக்கு உற்சாகம் மற்றும் உத்வேகம் அளிக்க Extracurricular Activities

பள்ளிக் கல்வித்துறை ஆனது மாணவ, மாணவிகளிடம் இருக்கும் தனித் திறன்களை வெளிக்கொண்டு வர Extracurricular Activities-களை சிறப்பான முறையில் வடிவமைத்துள்ளது. மாணவ, மாணவிகள் ஒரு வாரம் முழுவதும் முதன்மையான பாடங்களை மட்டுமே படித்தால் ஒருவித சோர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் மாணவ, மாணவிகளுக்கு Extracurricular Activities மூலம் உத்வேகம் அளிக்க பள்ளிக் கல்வித்துறை ஆனது முடிவு செய்துள்ளது.

புதிய 2024 - 25ம் கல்வியாண்டிற்கான வழிகாட்டு கையேட்டின் படி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது :

புதிய 2024 – 25ம் கல்வியாண்டிற்கான வழிகாட்டு கையேடு சிறப்பான முறையில் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு 16 செயல்பாடுகள் புதுசாக வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய Extracurricular Activities உடன் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி தயாரிக்கப்பட்டு இந்த நடப்பு 2024 – 25ம் கல்வியாண்டில் இதனை மகிழ்ச்சியுடன் பயன்படுத்த தொடங்கி வருகின்றனர்.

புதிய நாட்காட்டியின் படி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்பாடுகள் புதுசாக கற்பிக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளிடம் இருக்கும் தனித் திறன்களை இத்தகைய செயல்பாடுகள் வெளிக்கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை. மிகுந்த மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் அடைந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இதனைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Extracurricular Activities :

  • 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு 5 பாட வேளைகள் ஆனது கல்வி சார் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டும். அவை, சொல்லுவதை எழுதுதல், வாய்ப்பாடு, விளையாட்டு மற்றும்  கலையும் கைவண்ணமும் ஆகியவை ஆகும்.
  • 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு புதிதாக கல்வி டிவி மற்றும் சிறார் இதழ் வாசித்தல்/நூலகம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. வாரத்தில் 7 பாட வேளைகள் இவர்களுக்கு கல்வி சார் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலக்கிய மன்றம், வினாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், வானவில் மன்றம் போன்ற கல்வி சார் செயல்பாடுகளும், கலையும் கைவண்ணமும், சிறார் திரைப்படம், கலையரங்கம் (நாடகம்/கூத்து), கலையரங்கம் (இசை/வாய்ப்பாடு/நடனம்/பாரம்பரியக் கலை) என கல்வி சாரா செயல்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன.
  • 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இதே செயல்பாடுகளுடன் உயர்கல்வி வழிகாட்டி, உடல்நல மன்றம், கணினி நிரல்/மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
  • 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி 1, கல்வி சாரா செயல்பாடுகள் 1, கல்வி சார் செயல்பாடுகள் 1 என வாரத்திற்கு 4 பாட வேளைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. நீதி போதனை/ மதிப்புக்கல்வி, வாழ்வியல் திறன், செஞ்சுருள் சங்கம், மனநலம் மற்றும் மறுவாழ்வு, கணினி நிரல்/மனநலம் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆகியவை இதில் அடங்கும்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கருத்துக்கள் :

  • அரசு பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் புதிய 2024-25ம் கல்வியாண்டிற்கான வழிகாட்டு கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பாடப்புத்தக கல்வியோடு, மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
  • பள்ளிகளில் கல்வி மற்றும் இணைச்செயல்பாடுகளான மன்றச்செயல்பாடுகள், புத்தகம் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கண்டறியப்படுவார்கள்.
  • கம்ப்யூட்டர் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கம்ப்யூட்டர் நிரல் மன்றங்கள் மற்றும் எந்திரனியல் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களின் புதிதாக தொழில்நுட்ப அறிவு கண்டறியப்படும்.
  • அமலுக்கு வந்துள்ள புதிய 2024 – 25ம் கல்வியாண்டிற்கான வழிகாட்டு கையேடு குறித்து மாணவ, மாணவிகள் பலரும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

This Post Has 2 Comments

  1. Akshu

    Your point of view is very interesting.

Leave a Reply