Ezhaam Suvai Book Review : ஏழாம் சுவை புத்தக விமர்சனம்

நூல்: ஏழாம் சுவை

ஆசிரியர்: மருத்துவர் கு.சிவராமன்

பதிகம்: விகடன் பிரசுரம்

வகை: மருத்துவப் பகுதிகள்

ஏழாம் சுவை (Ezhaam Suvai Book Review)

மருத்துவர் சிவராமன் பற்றி சொல்லவே தேவையில்லை. பாரம்பரிய உணவுகளுக்குத் திருப்பம் சொல்லுவது பற்றி அவருடைய பேச்சுகளில் ஒன்றையாவது நாம் கேட்டிருப்போம். நம்மில் சிலர் அதை செயல்படுத்தியும் இருப்போம். இந்நிலையில் அவர் எழுதிய வாதம், பித்தம் கபம் – திரியோக உணவு ஆகியவற்றை பற்றி பார்க்கலாம். அவர் எழுதிய ஏழாம் சுவை (Ezhaam Suvai Book Review) நூல் நம் உடலுக்கு அடிப்படையாக இருப்பவை பற்றியது. அது நம் மனதுடன் தொடர்புடையது. உடலும் மனமும் இணக்கமாக இருந்தால் நோய் நீங்கும். உடல் ஆரோக்கியத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் பழைய மொழியில் சுவர் இருந்தாதான் சித்திரம் என்பது போல, உடலும் மனமும் சுவரும் சித்திரமாக அமைய வேண்டும். ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்பதை இந்த புத்தகத்தின் மூலம் ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவக் குறிப்புகளுடன் தந்திருக்கிறார் ஆசிரியர் சிவராமன்.

அரிசிதான் உடல் எடையை கூட்டுகிறது என்றால் 10,000 வருட வரலாற்றில் எத்தனை குண்டர்களை சந்தித்திருக்கும். சித்தன்ன வாசல் குகை ஓவியங்களிலோ அல்லது எந்தக்கோவில் ஓவியங்களிலோ தொப்பையுடன் இருப்பதை பார்த்திருக்கிறோமா? சர்க்கரை நோய் பற்றி இலக்கியங்களில் பல சங்கதிகள் இருந்ததா?. அப்புறம் இந்த தொப்பை எப்போ வந்தது? பாலிஷ் போட்ட வெளுத்த அரிசியை தவறாமல் சாப்பிட்டு பரபரப்பான வாழ்க்கையில் கனவில் மட்டுமே உடற்பயிற்சி செய்யும் கண்மூடித்தனமானவர்கள் கொழுப்பிற்கு அரிசிதான் காரணம் என்பதை கடைசியில் கண்டுபிடித்தனர்.

பிரச்சனை நம்முடைய வாழ்வியலிலும் பரபரப்பிலும் உள்ளதே ஒழிய அரிசியில் ஒளிந்திருக்கவில்லை என்பதை யாரும் இன்னும் அறியவில்லை. விளைந்த நெல், இளம் பேரனுக்குக் கஞ்சி, வளரும் குழந்தைக்குப் பச்சரிசி, பெரியவர்களுக்குக் கைக்குத்தல் புழுங்கல், மாலை சிற்றுண்டியாக பொரி, இரவில் அரிசிக் கஞ்சி என ஒரே பருவத்தில் விளைந்த நெல்லை, தேவைப்படும் நபருக்கு தேவைக்கேற்ப தயாரிப்பது நமது மரபு (Ezhaam Suvai Book Review) என்று குறிப்பிட்டுள்ளார். இதை விட எப்படி நம் பாரம்பரியத்தையும் பிரியத்தையும் பரிவையும் விளக்க முடியும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த பகுதியே சான்றாகும். மருத்துவத்திற்கு மீதி பகுதிகளை படித்து கடைப்பிடித்து ஆரோக்கியத்தில் முன்னேறுங்கள்.

Latest Slideshows

Leave a Reply