Facebook And Instagram Down : பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம் | மக்கள் அதிர்ச்சி
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் சுமார் அரை மணி நேரம் செயல்படாமல் (Facebook And Instagram Down) முடங்கியதால் உலகமே அதிர்ந்தது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை :
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான Facebook, Instagram இல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதைத் தவிர்க்கும் வகையிலும், பயனர்களே போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது. தகவல்களைப் பகிர்வதில் முன்னணி செயலியாக வாட்ஸ்அப், X மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றை மெட்டா நிறுவனம் தொடர்ந்து பின்பற்றுவதற்கு இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணம். அந்த வகையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒன்றன் பின் ஒன்றாக புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.
Facebook And Instagram Down :
இந்த சூழலில் உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் நேற்று இரவு 30 நிமிடங்களுக்கு மேல் முடக்கப்பட்டுள்ளதாக (Facebook And Instagram Down) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் முடங்கியுள்ளன. பேஸ்புக் பக்கங்கள் லாக் அவுட் ஆவதால் பயனர்கள் உள்நுழைய முடியாமல் தவித்து வந்தனர். அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் முற்றிலுமாக செயல்படாத நிலையில் இருந்தது. இதனால், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் செயலிழந்ததால் பயனர்கள் அவதிப்பட்டனர். இதனால், சமூக வலைதளங்களில் பல கேள்விகளை பயனாளிகள் எழுப்பினர். தொழில்நுட்ப காரணங்களால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் (Facebook And Instagram Down) வெளியாகியுள்ளது.
பயனர்கள் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களை பதிவிட்டு பல கேள்விகளை எழுப்பினர். பயனர்கள் X தளத்தில் #Facebookdown என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டனர். “இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் செயலிழந்துள்ளன. காரணம் என்ன” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும், மார்க் ஜுக்கர்பெர்க்கின் புகைப்படமும் பகிரப்பட்டு கலாய்த்தனர். இந்நிலையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் (Facebook And Instagram Down) விரைவில் சரி செய்யப்படும் என மார்க் ஜூக்கர்பெர்க் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை தொடக்கம் :
இதையடுத்து, அரை மணி நேரத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை சரி செய்யப்பட்டது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவை மீண்டும் செயல்பட்டதால் பயனாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?