Facts About Dove Birds: புறாவை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

பறவை இனங்களிலே வீட்டில் செல்லப் பிராணியாக கிளிக்கு பிறகு வளர்க்கப்படும் பறவை புறா ஆகும். பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்கள் முதல் இன்றைய கால வரையிலான தலைவர்கள் வரை புறாவை ஒரு அமைதியின் சின்னமாகவே பார்க்கப்டுகின்றனர். அது மட்டுமின்றி முற்காலத்தில் எந்த விதமான தொலைத்தொடர்பு சாதனங்கள் இல்லாத சமயத்தில் புறாவை தூது அனுப்பி செய்திகளை பரிமாறிக்கொண்டனர். உலகின் முதல் போன் புறாவாகத்தான் இருக்க முடியும். அப்படிப் பட்ட புறாவைப்பற்றி இப்பதிவில் காணலாம்.

புறாக்களின் வகைகள் (Types Of Dove Birds):

புறாவின் குடும்ப பெயர் கொளம்பிடே (Columbidae) இதன் கீழ்தான் Pigeon, Dove வகைகள் வருகிறது. Pigeon, Dove இந்த இரண்டுவகையான பெயர்கள் ஆங்கிலத்தில் புறாவிற்கு வழங்கப்படும் பெயர்கள் ஆகும். பெரிதாக இருந்தால் Pigeon, சிறிதாக இருந்தால் Dove. தமிழில் புறா என்றே ஒரு பெயரால் அழைக்கப்படுகிறது. பிற மொழிகளிலும் புறாவை ஒரு பெயராலே அழைக்கின்றனர். உலகில் மொத்தம் 344 வகையான புறாக்கள் இருந்தது. இதில் 13 வகைகள் அழிந்து விட்டது. இந்த அழிந்த இனங்களில் இரண்டு இனங்களை குறிப்பிட்டு சொல்லப்படுகிறது.

ஒன்று பேசேஞ்சர் பிஜியன் (Passenger pigeon) இவ்வகையான புறா பறக்கும் தன்மையை வைத்து இப்பெயர் வந்தது. இந்த இனம் அமெரிக்காவில் அதிகம் தென்பட்டது. இப்புறாக்கள் அழிய காரணம் வேட்டையாடப் பட்டதுதான். அமெரிக்கர்களுக்கு இந்த புறாவின் சுவை பிடித்ததால்  80 மற்றும் 90 ஆம் நூற்றாண்டுகளில் அதிகம் வேட்டையாடப்பட்டது. இரண்டாவது டூடூ (Dodo) புறா. மொரிஷியஸ் தீவுகளில் மட்டும் இருந்த ஒரு வகையான புறா இனம். இப்புறாக்கள் பறப்பதை மறந்து தரையிலே வாழ்ந்ததால். பிற விலங்குகளின் தாக்குதலால் அழிவுற்றது என்று சொல்லப்படுகிறது. புறாக்கள் 6 ல் இருந்து 10 வருடம் வரை உயிர்வாழும். புறாக்கள் மேல் உள்ள உண்ணிகள் மனிதர்கள் மேல் பட்டு அரிப்பு ஏற்படுத்துகிறது. அது மட்டுமின்றி ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாகிறது. என்று ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர்.

புறாக்களின் உணவு (Dove Birds Food):

புறாக்கள் விதை வகைகள், பயிர் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உட்கொள்ளும். ஒரு சில புறாக்கள் கூழாங்கற்களை சாப்பிடும். ஏனென்றால் புறாக்களுக்கு பற்கள் கிடையாது. அவை சாப்பிடும் பருப்புகள் சரியாக அறைப்படுவதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். அவற்றை தனது உணவு குழாயில் சேர்த்து வைத்துக்கொண்டு அதன் மூலமாக உணவை சரியாக அரைத்து வயிற்றில் தள்ளும். இதனால் செரிமானம் வேகமாகும். இது புறா மட்டுமின்றி ஒருசில பறவை இனங்களும் கூழாங்கற்களை விழுங்கும். இதற்கு தமிழில் தூதுணம் என்று பெயர்.

புறாக்களின் இனப்பெருக்கம்:

புறாக்கள் ஒரு வருடத்தில் 6 முறை முட்டை இடும். ஒவ்வொரு முறையும் 2 முட்டைகள் இடும். ஆண் மற்றும் பெண் புறாக்கள் சேர்ந்தே அடைகாக்கும். அடைகாக்கும் முட்டை 20 முதல் 25 நாட்களுக்குள் பொரித்து விடும். இப்படி பொரித்து வெளியே வந்த குஞ்சுகளுக்கு இரையை வெளியில் இருந்து மட்டுமின்றி, தங்களுடைய உணவுக்குழாயில் இருந்தும் ஒருவித பாலை சுரந்து கொடுக்கும். இந்த உணவில் தான் அதிகப்படியான ஊட்டச்சத்து புறா குஞ்சுகளுக்கு கிடைக்கிறது. புறா குஞ்சுகள் 5 வாரத்தில் பறக்க ஆரம்பிக்கும். புறாக்கள் தன் இணையோடு மட்டும்தான் இணை சேரும். பிற புறாக்களோடு இணைசேருவது என்பது அரிதானது. தான் இட்ட முட்டைக்காகவும் தன்னுடைய ஜோடிக்காகவும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புறா தன் இணையை நாடி அந்த இடத்திற்கு வந்துவிடும்.    

புறா தூது:

உலகத்தில் முதன்முதலில் புறாக்களை வைத்துதான் செய்திகளை பரிமாறியுள்ளனர். டெலக்ராம் கண்டு புடிப்பிற்கு பிறகுதான் புறா தூது குறைந்தது. புறாக்களை அலுவல் சம்பந்தமாக பயன்படுத்திய கடைசி நிறுவனம். ஒரிசாவில் இருக்கக்கூடிய காவல் துறைதான். ஒரிசாவில் உள்ள காவல் நிலையத்தில் புறா தூதுக்கென்றே தனியாக ஒரு துறை இருந்தது. சுமார் 60 வருடங்களாக அந்த துறை செயல்பட்டது. 800 க்கும் மேற்பட்ட புறாக்கள் வேலை பார்த்துள்ளது. 2006 ல் அந்த துறை முழுமையாக மூடப்பட்டது. இராணுவ பயன்பாட்டில் இருந்த புறா அதன் பிறகு மக்களுக்கு தபால்களை வழங்கவும் பயன்படுத்தப்பட்டது. டெக்னாலஜி வளர ஆரம்பித்தவுடன் புறாக்களின் தேவை குறைந்துவிட்டது.

புறாவிற்கும் மனிதனுக்குமான தொடர்பு:

புறாக்களுக்கும், மனிதர்களுக்குமான தொடர்பு என்பது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்கிறது. பண்டைய (Mesapatomiya) மெசொபொடோமியர்கள் அன்பின் கடவுளுடைய அடையாளமாக புறாவை பார்த்திருக்கிறார்கள். சிந்துசமவெளி நாகரீகத்தில் புறாவை வழிபட்டதிற்கும், சாப்பிட்டதற்கும் அறிகுறிகள் இருக்கு என்பதற்கான பதிவுகள் இருக்கிறது. கிரேக்கர்களும், பண்டைய கால ரோமானியர்களும் புறாவை புனிதமாக பார்த்திருக்கிறார்கள்.

சங்க இலக்கியங்களிலும் புறாவை பற்றின பதிவுகள் இருக்கிறது. புனிதமாகவும், உணவாகவும் பார்க்கப்பட்ட புறாவை நாளைடைவில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்த ஆரம்பித்தனர். உலகின் முதல் தகவல் தொடர்பு சாதனம் புறா தான். அதிலும் குறிப்பாக எங்கெங்கு அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டதோ அப்போதிலிருந்தே புறாக்களை தூதாக  அனுப்புதல் என்பது வளர்ந்து கொண்டே இருந்தது. அதிலும் போர்க்காலங்களில் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இந்த புறாக்கள் இருந்தது. அதிலும் முதல் உலகப் போரில் அதிக அளவில் புறாத்தூது பயன் படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி இன்றளவும் புறாக்களை போருக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

புறாக்களின் பந்தயம் (Dove Birds Race):

உலகம் முழுக்க புறாக்களின் பந்தயம் என்பது பிரசித்திப்பெற்ற ஒரு விளையாட்டாக இருக்கிறது. அதில் இந்தியாவும் ஒன்று. தமிழகத்தில் புறா பந்தயத்திற்கு பிரபலமான இடம் வட சென்னை.  ஹோமர் புறாக்கள் (Homerpigeon) ஹோமிங் சென்ஸ் வீட்டிற்கு திரும்பி வரும் குணம். இந்த புறாக்களுக்கு நிறைய இருக்கிறது.  இவ் வகையான ஹோமர் புறாக்கள் தான் பந்தயத்தில் பயன்படுத்த கூடிய புறாக்கள். இவ்வகையான புறாக்களுக்கு சத்தான உணவுகள், பறக்க பயிற்சி மற்றும் உடல் சரி இல்லை என்றால் மருந்து, வருடம் தவறாமல் தடுப்பூசி இப்படி பார்த்து பார்த்து பந்தயத்திற்காக புறாக்கள் வளர்க்கப்படுகிறது.

பூறா பந்தயத்திற்காகவே 10 திற்கும் மேற்பட்ட மன்றங்கள் (Club) செயல்படுகிறது.  இந்த மன்றங்கள்தான் இந்த பந்தயங்களை நடத்துகிறது. இந்த பந்தயம் இரண்டு வகையாக நடத்தப்படுகிறது. ஒரு வயதிற்குள் உள்ள புறாக்களுக்கான பந்தயம் மற்றொன்று ஒரு வயதிற்கு மேற்பட்ட புறாக்களுக்கான பந்தயம். இந்த பந்தயம் கிலோமீட்டரை கணக்கிட்டு நடத்தப்படும். அதுவும் (Air distance) ஐ அடிப்படையாக வைத்து கிலோமீட்டரை கணக்கிட்டு நடத்தப்படுகிறது. இதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்றால் புறாக்களை மொத்தமாக ஓரிடத்தில் இருந்து விடப்பட்டு அவை அனைத்தும் அவைகளின் வீட்டிற்கு வந்து சேரவேண்டும்.

அப்படி வந்து சேரும் புறாக்களின் வந்த நேரத்தையும், அவை கடந்து வந்த தூரத்தையும் அடிப்படையாக வைத்து வேகத்தை கணக்கிட்டு தான் அதன் அடிப்படையில் வெற்றி, தோல்வி என்று புறா பந்தயத்தில் தீர்மானிக்கப்படும். ஒருத்தர் ஒன்றிற்கும் மேற்பட்ட புறாக்களை விடலாம் ஆனால் அவற்றின் அளவை அந்த மன்றங்கள் தான் தீர்மானிக்க முடியும்.

பந்தயத்தில் விடப்படும் புறாக்களின் கால்களில் ஒரு அடையாளம் (Tag) இருக்கும். இது  மன்றங்கள் புறாக்களுக்கு கொடுக்க கூடிய அடையாளம். இந்த அடையாளத்தில் மன்றத்தின் பெயர், வருடம், வரிசை எண் குறிப்பிட்டுருக்கும். இதை புறாகள் குஞ்சு பொரித்த 5 வது நாள் காலில் மாட்டப்படும். ஏனென்றால் புறாக்கள் வளரும் போது கால்கள் விரிந்து விடும் அதன் பிறகு அந்த அடையாளங்களை மாட்ட முடியாது. இந்த அடையாளம் பொருத்தப்பட்ட பிறகுதான் புறாக்களை அடையாளம் காண முடியும்.

பந்தயத்தில் வெற்றிபெறும் புறாக்களுக்கு மதிப்பு அதிகம். பந்தய புறாக்களை ஏலம்விட்டு அவற்றை பல லட்சங்கள் கொடுத்தும் வாங்குகிறார்கள். புறா பந்தயத்தில் மட்டும்தான் ஆண், பெண் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. இரண்டையுமே பந்தயத்தில் பங்குபெறும்.    

Latest Slideshows

Leave a Reply