Faith Awards 2023 : 'ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2023' விழா

சென்னை கலைவாணர் அரங்கில் மார்ச் 29 அன்று ‘ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2023’ விழா (Faith Awards 2023)  நடைபெற்றது. இந்த ‘ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2023’ விழா ஆனது மண், மொழி, மக்கள் நலனுக்காக வாழும் மாமனிதர்களை கெளரவிக்கும் விழா ஆகும். பெரும் அரசியல் ஆளுமைகளும் மற்றும் திரைத்துறை கலைஞர்களும் விருதினை வழங்கினர். இந்த ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் (Faith Awards 2023) ஆனது பெருந்தமிழர், டாப்-10 மனிதர்கள் மற்றும் டாப்-10 இளைஞர்கள் என மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

Faith Awards 2023 - பெருந்தமிழர் விருது :

தமிழ் மொழியை நான்கு தலைமுறைக்குக் கொண்டு சேர்த்த பேராசான் சாலமன் பாப்பையா அவர்கள் பெருந்தமிழர் விருது பெற்றிக்கிறார்.

Top - 10 மனிதர்கள் :

  • நம்பிக்கை மனிதர்களாக 31 ஆண்டுகளாகப் “அஞ்சோம் அஞ்சோம் அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறைக்கு அஞ்சோம்” என அரச பயங்கரவாதத்தின் கோரமுகத்துக்கு எதிராக போராடி சமர் செய்து நீதியை நிலைநாட்டிய வாச்சாத்தி பெண்கள்.
  • அனிதா சத்யம் தன்னைத் தாக்கிய புற்றுநோயினை துணிச்சலாக எதிர்கொண்டது மட்டுமல்லாமல் அதேபோல புற்றுநோய் பாதித்த இளைஞர்களுக்குப் புகைப்படக்கலை கற்றுத்தந்து நம்பிக்கையை வாழ வைப்பவர்.
  • சரவணன் வறண்டு பட்டுப்போன விவசாய நிலங்களை உயிர்ப்பித்து, வறுமை என்னும் வார்த்தையை அடித்து விவசாயிகளை லாபம் பார்க்க வைத்தவர்.
  • டாக்டர். ஆறுமுகம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்து ரூபாய்க்கு மேலாக ஒற்றை ரூபாய் கூட வாங்காமல் மருத்துவத்தைச் சேவையாகச் செய்து வருபவர்.
  • அப்பள வியாபாரி ராஜேந்திரன் ஏழை மாணவர்களின் மாநகராட்சிப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு ரூ.2 கோடி தந்தவர்.
  • ஒடியன் லட்சுமணன் கலை கல்வியின் மூலம் பழங்குடி மக்களின் வாழ்வில் கல்வி ஒளியை ஏற்றிக்கொண்டிருப்பவர்.
  • ‘கௌசிகா’ செல்வராஜ் வறண்டு நிலமாக மாறிய நீர்நிலைகளுக்கு அதன் இயல்பை மீட்டுருவாக்கம் செய்து காட்டி வருபவர்.
  • மனோரமா பால்வினை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ஆனந்த இல்லம்’ அமைத்து நல்வாழ்வு தந்து கொண்டிருப்பவர்.
  • வீரமுத்துவேல் உலக நாடுகளே இந்தியாவைத் தலை நிமிர்ந்து பார்க்கும் சாதனையை ‘சந்திரயான் 3’ மூலம் செய்து முடித்தவர்.
  • அப்துல் ரஹீம் பார்வைச்சவால் கொண்ட 40,000 பேரின் வாழ்க்கையில் ஒளியேற்றி நல்லுணவு கொடுத்து வருபவர்.

Top - 10 இளைஞர்கள் :

  • மோகன் ‘இப்போ பே’ என்று பரிவர்த்தனை செயலி மூலம் அயராத உழைப்பும், திறமையும் கொண்டு வெற்றி பெற்றவர்.
  • தருண் சேகர் 500 ஆண்டுக்காலத்துக்கு முன்னர் சங்ககாலத்தில் அழிந்து போன இசைக்கருவி யாழினை மீட்டெடுத்து பாடல்களை உருவாக்கி உள்ளார்.
  • ஹாக்கி வீரர் கார்த்தி அரியலூரில் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று இந்திய ஹாக்கியில் அசாதாரணமான இடத்தைப் பிடித்திருக்கிறார்.
  • வீரலட்சுமி வாழ்நாள் முழுக்க உயிர்களைக் காப்பாற்ற முடியும் என ஆம்புலன்ஸ் ஸ்பீடோமீட்டரை இயக்குகிறார்.
  • மாதவி தனது வில்லிசையின் மூலம் காற்றோடு காற்றாக தெய்வங்களின் உன்னதங்களைப் பாடி மக்கள் மனதில் மரபும் தொன்மமும் அழியாமல் காக்கிறார்.
  • மோனிஷா பிளசி சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று தன் திறமையால் வைரல் ஸ்டாராக மாறி உள்ளார்
  • ஹரிதாஸ் இளம் சிறைவாசிகளின் நல்வழிகாட்டியாக இருக்கிறார்.
  • ஸ்ரீவத்ஸா வேமா தட்டணு தானம் முகாம்களின் மூலமாக மரணத்தை விரட்டுகிறார்.
  • சுத்தியல் வீரர்களாக சண்டை செய்யும் சகோதரர்களான அன்பறிவு.
  • வாழ்வின் உன்னதமான தேவை மனிதமே என்று உரக்கப் பேசிய இயக்குநர் மந்திரமூர்த்தி.
    என 21 மகத்தான நபர்கள் விருதுகளைப் பெற்றிக்கிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply