Samsung அறிமுகம் செய்யும் புதிய Fan Edition Model Smartwatch

Fan Edition Model Smartwatch :

தென் கொரியாவை தலமாக கொண்ட Samsung நிறுவனம் ஆனது 1969 முதல் பல புதிய டெக் சாதனங்களை உலகிற்கு அறிமுகம் செய்து வருகின்றது. புதுமைகளை புகுத்துவதில் சாம்சங்  தனித்துவம் வாய்ந்தது. Samsung நிறுவனம் தனது புதிய Galaxy Smartwatch-யின் Fan Edition மாடலை (Fan Edition Model Smartwatch) உலக சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த Smartwatch இந்திய மதிப்பில் ரூ.20,000 என்ற விலைக்குள் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Smartwatch இயங்கும் Wear OS ஆகவும், Galaxy வாட்ச் 4யின் வடிவமைப்பில் வரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

இது 24/7 கண்காணிப்பு சென்சார்களை கொண்டது. இது 7 நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுளுடன் வருகிறது. Exynos W920 சிப் மூலம் இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. ECG மற்றும் PPG போன்ற பல்வேறு உடல்நல கண்காணிப்பு சென்சார்கள் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் துல்லியமான தகவலை வழங்கும் என்று கூறப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்தை 24 மணி நேரமும்   கண்காணிக்கும் திறன் கொண்டதாக இருக்குமென்று கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் கொண்ட பயனர்களுக்கு இது மிகவும் ஏற்றது. சென்சார் மற்றும் LED வசதிகளுடன் இருக்கும். இதனால் பயனர்களின் கைகளில் ஸ்மார்ட் வாட்ச் விவரங்கள் ப்ராஜெக்ட் செய்யப்படும். நம்மால் இந்த LED மூலமாக அதன் ஒளிர்வு அளவு கட்டுப்படுத்தமுடியும்.

உலகளவில் ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் புதிய வகை தொழில்நுட்பமாக ப்ரொஜெக்டர் வசதி ஒன்றை சாம்சங் நிறுவனம் அதன் Smartwatch மூலம் அறிமுகம் செய்யவுள்ளது. 45GB டேட்டா, அன்லிமிடெட் 5ஜி மற்றும் வாய்ஸ் கால், அனலாக் வாட்ச்களை விட இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. இந்த கேலக்ஸி வாட்ச் FEன் Hardware-ன் சரியான விவரக்குறிப்புகள் மற்றும் விலைக்குறிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எல்லாம் இன்னும் ஆன்லைனில் வெளிவரவில்லை. இந்த வாட்ச் (Fan Edition Model Smartwatch) எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. ஆனால் இதுபற்றிய விவரங்கள் இன்னும் சில மாதங்களில் வெளியாகும்.

Latest Slideshows

Leave a Reply