Farmers Super Market in Puducherry: புதுச்சேரியில் விவசாயிகளால் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்..!

நம்ம புதுச்சேரியில் விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்தும் விதமாக புதுச்சேரி அரசு வேளாண்துறை சார்பில் பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு நிதி உதவி வழங்கப்படுகிறது. பல்வேறு விதமான தொழில் முனைவோர்களையும் இதனால் உருவாக்கிக் கொண்டுள்ளது.

வேளாண் பல்பொருள் அங்காடி :

இதன்படி புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூரை சேர்ந்த 500 விவசாயிகள் 2000 ரூபாய் செலுத்தி வேளாண் உழவர் உற்பத்தியாளர்கள் என்னும் நிறுவனத்தை தற்போது தொடங்கியுள்ளனர். இந்த வேளாண் நிறுவனத்தில் பல்வேறு வகையான வேளாண் பொருட்கள் மற்றும் சர்க்கரை மற்றும் நாட்டுச் சர்க்கரை போன்ற மட்டுமே கிடைத்துள்ளன.

ஆரம்பத்தில் இது போன்ற சிறிய பொருட்கள் மட்டுமே விற்கப்பட்டு வந்தது. மேலும் இதனை மேம்படுத்தும் நோக்கத்தில் அனைவரும் சேர்ந்து இந்தப் பல்பொருள் அங்காடியை நவீனப்படுத்தும் விதமாக நபார்டு வங்கி என்னும் விவசாய கடன் வங்கியில் கடனைப் பெற்று மேம்படுத்த உள்ளது.

இந்த வங்கியானது தானாகவே முன்வந்து இந்த விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் தொகையை அளித்துள்ளது. மேலும் அந்த வங்கி அளித்த தொகையை வைத்து இந்தப் பல் பொருள் அங்காடியில் இன்னும் சிறு தானியங்கள் மற்றும் இயற்கையாக உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்கள் போன்ற அனைத்து பொருட்களும் கிடைக்கும் அங்காடியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்த வேளாண்துறை அமைச்சர் தேனி. ஜெயக்குமார் அவர்கள் மற்றும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான சிவா ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும் வில்லியனூர் பகுதியில் உள்ள விவசாயிகள் விளைவிக்கும் அவர்களின் விவசாய பொருட்களை இந்த பல் பொருள் அங்காடியில் விற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அந்த உள்ளூர் விவசாயிகளுக்கும் பெரும் லாபம் கிடைப்பதாக கூறி வருகின்றனர். இது தங்களுடன் சேர்ந்து தங்கள் மக்களும் வளர வேண்டும் என்னும் அவர்களின் நல்ல எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. இதனை அறிந்த அமைச்சர் வெகுவாக அவர்களைப் பாராட்டி வருகிறார்.

உள்ளூர் மக்களுக்கு சிறப்பு உதவி :

இதுகுறித்து அந்த உள்ளூர் விவசாயி ஒருவர் கூறும் போது, புதுவை விவசாயிகள் விளைவிக்கும் சந்தை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு போதுமான வசதி இல்லாததனால் எல்லோருமே நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றோம். தற்போது இந்த 500 விவசாயிகள் ஆளுக்கு 2000 ரூபாய் பங்களிப்பு செலுத்தி பல் பொருள் சிறப்பு இனம் அங்காடி தொடங்கி வைத்தனர். இதற்கு நபார்டு வங்கியும் அவர்களின் பெரிய உதவியை அளித்தது. இதன் அடிப்படையிலேயே இயற்கை வேளாண் பொருட்கள் மற்றும் வில்லியனூரை சேர்ந்த மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் விவசாய பொருட்களை கொள்முதல் செய்து சந்தைப்படுத்தி அந்த விவசாயிகளுக்கும் இதனால் லாபம் வரும்படி செய்து வருகிறோம். இதன் மூலமாக அதனைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

Latest Slideshows

Leave a Reply