Fastest Deliveries In IPL History : ஐபிஎல் தொடரில் அதிக வேகத்தில் பந்து வீசிய பவுலர்களின் விவரம்

மும்பை :

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் மயங்க் யாதவ். 21 வயதான மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். மயங்க் யாதவ் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வெறும் 14 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Fastest Deliveries In IPL History :

இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிராக மயங்க் யாதவ் மணிக்கு 155.8 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இது மயங்க் யாதவ்  ரசிகர்களை கொண்டாட வைத்தது. பின்னர் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அதை விட அதிகமாக பந்துவீசி மணிக்கு 156.7 கிமீ வேகத்தை பதிவு செய்தார். இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அதிவேக பந்து வீச்சாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் சமீபத்திய புள்ளி விவரத்தின்படி மயங்க் யாதவ் வீசிய பந்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக வீசப்பட்ட டாப் 3 பந்து கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிவேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய வீரர் ஷான் டெய்ட் (Fastest Deliveries In IPL History) பெற்றுள்ளார். 2011-ல் 157.7 கி.மீ வேகத்தில் அடித்ததே இன்னும் சாதனையாக உள்ளது. நியூசிலாந்து வீரர் லோகி பெகுர்சன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 2022 இல் மணிக்கு 157.3 கிலோமீட்டர் வேகத்தை எட்டியுள்ளார்.

மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்த காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக் உள்ளார். அவர் 2022ல் 157 கிமீ வேகத்தில் பந்துவீசியுள்ளார். இந்த பட்டியலில் மயங்க் யாதவ் 4வது இடத்தில் உள்ளார். ஆர்சிபிக்கு எதிராக மணிக்கு 156.7 கிமீ வேகத்தில் பந்து வீசினார். ஆர்சிபிக்கு எதிராக மணிக்கு 156.7 கிமீ வேகத்தில் பந்து வீசினார். ஐந்தாவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹென்ரிச் நோக்கியா உள்ளார். 2020ல் 156.2 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார். ஆனால், 160 கிமீ வேகத்தில் வீசுவேன் என மயங்க் யாதவ் பேட்டியில் கூறியிருந்தார். விரைவில் இந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply