FDA Approved Exblifep : FDA அங்கீகாரம் பெற்ற 'எக்ஸ்ப்லைஃபெப்' இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது

முனைவர் செந்தில்குமார் - இந்தியாவிற்கே பெருமை சேர்த்த தமிழர் :

தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் செந்தில்குமார் கண்டுபிடித்த ‘எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற மருந்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (FDA – Food And Drug Administration) அங்கீகாரம் (FDA Approved Exblifep) வழங்கி உள்ளது. இந்த உயிர் காக்கும் மருந்திற்கு உலக அளவில் அங்கீகாரமும் மற்றும் இந்தியாவிற்கு பெருமையும் கிடைத்துள்ளது. முனைவர் செந்தில்குமார் கண்டுபிடித்த ‘எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற மருந்து (FDA Approved Exblifep) தமிழர்களுக்கு மட்டுமின்றி மொத்த இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளது. ‘அலெக்ஸாண்டர் பிளம்மிங்’ என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த பென்சிலின் என்ற உயிர் காக்கும் மருந்தினை மக்கள் அனைவரும் அறிவர். இந்த பென்சிலின் மருந்து ஆனது சிறந்த ஆன்டிபயாட்டிக்காக இருந்து வருகிறது. இன்று வரை லட்சக்கணக்கான மனித உயிர்களைக் காக்க இந்த பென்சிலின் மருந்து ஆனது மருத்துவ உலகில் பயன்பட்டு வருகிறது. இந்த பென்சிலின் மருந்துக்கு (FDA Approved Exblifep) அடுத்தபடியாக தற்போது முனைவர் செந்தில்குமாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற மருந்து சிறந்த உயிர் காக்கும் மருந்தாக மருத்துவ உலகில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

FDA Approved Exblifep :

  • ‘அலெக்ஸாண்டர் பிளம்மிங்’ என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த பென்சிலின் என்ற உயிர் காக்கும் மருந்தினை மக்கள் அனைவரும் அறிவர். பென்சிலின் இரண்டாம் உலகப் போரின் போது தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை குணப்படுத்த பெருமளவு உதவியது. அதனால் மக்கள் உயிரிழப்பு ஆனது அச்சமயம் எளிதாக கட்டுப்படுத்தப்பட்டது.
  • இந்த பென்சிலின் மருந்து ஆனது சிறந்த ஆன்டிபயாட்டிக்காக இருந்து வருகிறது.  இன்று வரை லட்சக்கணக்கான மனித உயிர்களைக் காக்க இந்த பென்சிலின் மருந்து ஆனது மருத்துவ உலகில் பயன்பட்டு வருகிறது.
  • இந்த பென்சிலின் மருந்துக்கு அடுத்தபடியாக தற்போது முனைவர் செந்தில்குமாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற மருந்து சிறந்த உயிர் காக்கும் மருந்தாக மருத்துவ உலகில் (FDA Approved Exblifep) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ‘எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற மருந்து சிறுநீர் குழாயில் பாக்டீரியாவினால் ஏற்படும் பல வகையான தொற்றுகளை நீக்குவதில் சிறந்து செயல்படுகிறது. வழக்கமாக சிறுநீர்க்குழாய் தொற்றுக்கு கொடுக்கப்படும் மருந்தினை காட்டிலும் சிறப்பாக இந்த ‛எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற மருந்து செயல்படுகிறது.
  • மேலும் நுரையீரலில் ஏற்படும் நிமோனியா போன்ற நோயை குணப்படுத்துவதிலும் இந்த ‘எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற மருந்து நன்றாக செயல்படுகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்களையும் இந்த பென்சிலின் மருந்து குணப்படுத்த உதவுகிறது.

'எக்ஸ்ப்லைஃபெப்' மருந்தின் சிறப்பு :

  • உலக அளவில் பென்சிலினுக்கு பிறகு தற்போது வரை கடந்த 77 ஆண்டுகளாக 258 பல்வேறு வகையான ஆன்டிபயாடிக் மருந்துகள் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோயை குணப்படுத்தவும் மற்றும் பல்வேறு நோய்களை குணப்படுத்த மொத்தம் 4,283 மருந்துகள் கண்டுபிடிக்கபட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த மருந்துகளில் ஒன்று கூட இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வருந்ததக்க விஷயம் ஆகும்.
  • இந்தியாவில் உ.பி.யில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் கருத்தரிப்பை தடுக்க உதவும் ஆர்மெலோக்சிபன் என்ற மருந்தினை கண்டுபிடித்தது. ஆனால், இந்த ஆர்மெலோக்சிபன் என்ற மருந்து இந்தியாவில் மட்டுமே விற்பனையில் உள்ளது. உலகின் மற்ற பகுதிகளில் இந்த ஆர்மெலோக்சிபன் மருந்து  அங்கீகரிக்கப்பட்டு விற்கப்படவில்லை.
  • தற்போது முனைவர் செந்தில்குமாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘எக்ஸ்ப்லைஃபெப்’ என்ற மருந்து சிறந்த உயிர் காக்கும் மருந்தாக மருத்துவ உலகில் (FDA Approved Exblifep) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • உலகின் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் விற்பனை செய்யப்படும் முதல் இந்திய மருந்து  என்ற பெருமை பெற்றுள்ளது. தற்போது இந்த உயிர் காக்கும் மருந்து ஆனது விற்பனைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நம்  நாட்டிற்கு வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது

Latest Slideshows

Leave a Reply