February 2025 Sunita Williams Will Return To Earth : சுனிதா வில்லியம்ஸ் பிப்ரவரி 2025ல் பூமி திரும்புவார்

கடந்த ஜூன் மாதம் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு International Space Station (ISS) சென்ற இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உள்ளிட்ட 2 நாசா விண்வெளி வீரர்கள் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா தற்போது (February 2025 Sunita Williams Will Return To Earth) அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விரைவில் பூமிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

8 நாள் பயணம் :

கடந்த ஜூன் மாதம் 5-ம்  தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் காப்ஸ்யூல் விண்கலத்தில் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் 8 நாள் சோதனை பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையம் International Space Station (ISS) சென்ற அவர்கள் தற்போது 80 நாட்கள் கடந்த போதும் பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கி உள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு எப்போது திரும்புவார்கள் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் சிக்கவில்லை என நாசா தெரிவித்துள்ளது. எக்ஸ்பெடிஷன் 71/72 குழுவினருடன் புட்ச் மற்றும் சுனிதா பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் ஸ்டார்லைனர் விண்கலத்தின் சோதனை மற்றும் தொழில்நுட்ப பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவசரநிலை ஏற்பட்டால் இருவரும் ஸ்டார்லைனரில் பூமி திரும்புவார்கள் என்று நாசா கூறியுள்ளது.

நாசா முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளது :

‘விண்வெளிப் பயணம்’ என்பது மிகவும் ஆபத்தானது. அதுவும் சோதனை அடிப்படையிலான பயணம் என்பது பாதுகாப்பானது அல்ல. அதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம் என இதுதொடர்பாக முக்கிய அப்டேட்டை நாசா வெளியிட்டுள்ளது. விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் போயிங்கின் ஸ்டார்லைனர் காப்ஸ்யூல் விண்கலம் மட்டும் பூமிக்கு திரும்பும். அதுதான் பாதுகாப்பான வழியாக இருக்கும். விண்வெளி வீரர்களின் ஒரு வார கால சோதனை விமானம் மேலும் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

February 2025 Sunita Williams Will Return To Earth - பிப்ரவரி 2025ல் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் பூமி திரும்புவார் :

புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் எக்ஸ்பெடிஷன் 71/72 குழுவினரின் ஒரு பகுதியாக பிப்ரவரி 2025-ம் ஆண்டு வரை தங்கள் பணியை முறையாகத் தொடர்வார்கள். அவர்கள் SpaceX Crew-9 பணிக்கு ஒதுக்கப்பட்ட மற்ற இரண்டு குழு உறுப்பினர்களுடன் வரும் 2025 பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன்  விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்புவார்கள் (February 2025 Sunita Williams Will Return To Earth) என நாசா கூறியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகனின் நான்கு விண்வெளி வீரர் இருக்கைகளில் இரண்டு இருக்கைகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்காக காலியாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Latest Slideshows

Leave a Reply