Fees Fixed For Extending Construction Projects : கட்டுமான திட்டங்களுக்கான பதிவு காலம் நீட்டிப்பதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்த கட்டுமான திட்டங்களுக்கான கால வரம்பை நீட்டிப்பதற்கு கட்டணம் (Fees Fixed For Extending Construction Projects) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ரியல் எஸ்டேட் ஆணையம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை அடுத்து ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்யவும், புகார்களை விசாரிக்கவும், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம், மாநில ஆணையங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. மேலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் படி தமிழகத்தில் 5381 சதுர அடி அல்லது 8 வீட்டு மனைகள் இருந்தால் அந்த திட்டத்தை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.      

கட்டணம் வசூலிக்கப்படும் விவரம்

தமிழகத்தில் குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்ய 10.7 சதுர அடிக்கு 25 ரூபாயும், வணிக நிறுவன திட்டங்களுக்கு 10.7 சதுர அடிக்கு 60 ரூபாய் என்ற விகிதத்தில் தற்போது வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் திட்டங்களுக்கான பதிவானது காலாவதியாகும் நாளி்லிருந்து 3 மாதத்திற்கு முன்னரே நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் கூடுதலாக 10% கட்டணம் வசூலிக்கப்படும் (Fees Fixed For Extending Construction Projects) என கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு ஒன்றை ரியல் எஸ்டேட் ஆணையம் வெளியிட்டது.  

இதன்படி ரியல் எஸ்டேட் ஆணையத்தில் திட்டங்களை பதிவு செய்ய விண்ணப்பிக்கும் போதே விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் அதற்கான கால வரம்பை தெரிவிக்க வேண்டும். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் கட்டுமானங்களை 2 அல்லது 3 ஆண்டுகளில் முடிப்பதாக தெரிவிக்கும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடியாதபட்சத்தில் அதற்கு தேவையான ஆவண ஆதாரங்ககளை தெரிவித்து மேலும் 2 வருடங்கள் வரை அவகாசம் பெற்று கொள்ளலாம். இதுவரை இந்த காலவரம்பை புதுப்பிப்பதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் (Fees Fixed For Extending Construction Projects) இருந்தது. தற்போது இது தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கட்டணம் அறிவிப்பு (Fees Fixed For Extending Construction Projects)

இந்த அறிவிப்பில் ரியல் எஸ்டேட் ஆணைய சட்டப்படி பதிவு செய்த கட்டுமான திட்டங்களின் கால வரம்பை புதுப்பிக்க இனி வரும் காலங்களில் கட்டணம் (Fees Fixed For Extending Construction Projects) வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதல் ஒரு வருடத்திற்கு கட்டுமான திட்டங்களுக்கு பதிவு செய்யும்போது செலுத்திய கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் செலுத்த வேண்டும். இதனை தொடர்ந்து மீண்டும் 1 ஆண்டு காலம் அவகாசம் தேவைப்பட்டால் பதிவு கட்டணத்தில் இருந்து 20% தொகையை செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply