Fighter Box Office Collection Day 2 : 2 நாள் வசூல் ஆனது ரூ.60 கோடியைத் தாண்டியது

ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் நடித்த ‘Fighter’ பாக்ஸ் ஆபிஸ் 2 நாள் (Fighter Box Office Collection Day 2) வசூல் ரூ.60 கோடியைத் தாண்டியது.

Fighter Box Office Collection Day 2 :

ஹிருத்திக் ரோஷன், அனில் கபூர்  மற்றும் தீபிகா படுகோன் நடித்த ‘Fighter’ படம் அதன் முதல் வார இறுதியில் ரூ.61 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. Fighter படம் அதன் வார முதல் வெள்ளியன்று மதிப்பிடப்பட்ட ரூ.39 கோடி வசூலை தாண்டி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு மொத்த வசூல் ரூ.60 கோடியை எட்டியது. 22.5 கோடி வசூலுடன் திரையரங்கு பயணத்தை தொடங்கிய இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் ஆனது 39 கோடி ரூபாய் (Fighter Box Office Collection Day 2) ஆகும். இது முதல் நாள் வசூலை விட 73 சதவீதம் அதிகமாகும். இந்த Fighter படம் அதன் முதல் வெள்ளியன்று கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த Fighter படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஆனது  விரைவில் ரூ.100 கோடியைத் தாண்டும் என்பதை இது நிரூபித்துள்ளது.

பார்வையாளர்களின் கருத்தான இந்த Fighter படம் மிக சிறப்பாக உள்ளது என்பது நல்ல செய்தி ஆகும். நிறைய நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் ஆவார். இவர் பதான், போர் மற்றும்  பேங் பேங் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் ஆவார். சித்தார்த் ஆனந்த், மம்தா ஆனந்த், ஜோதி தேஷ்பாண்டே, அஜித் அந்தரே, அங்கு பாண்டே, ரமோன் சிப் மற்றும் கெவின் வாஸ் ஆகியோர் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ஆவர். ராமன் சிப் மற்றும் சித்தார்த் ஆனந்த் இந்த படத்திற்கு கதைக்களம் அமைத்துள்ளனர்.

'Fighter’ படத்தின் கதை :

இப் ‘Fighter’ படத்தின் கதை ஆனது தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு ஏர் டிராகன்கள் எனப்படும் புதிய மற்றும் மிகவும் திறமையான பிரிவை விமானத் தலைமையகம் உருவாக்குவதைச் சுற்றி அமைந்துள்ளது. ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. அந்த தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு ஏர் டிராகன்களின் வாழ்க்கையை இந்த கதை ஆராய்கிறது. தங்கள் தேசத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்ய அர்ப்பணிப்புள்ள நபர்கள் தயாராக உள்ளனர்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் உரை :

இயக்குனர் சித்தார்த் ஆனந்த், “ஒரு போர் என்பது ஒரு நாட்டுக்கு எதிரானது அல்ல. ஒரு போர் என்பது பயங்கரவாதத்துக்கு எதிரானது ஆகும். அதாவது அது ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிரான போராட்டம் அல்ல, அது ஒரு பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் ஆகும். அதன் சூழல், அதன் பின்னணியில் உள்ள உணர்ச்சிகளை மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளத்தான் இந்த ‘Fighter’ படம் முழுவதும் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply