Fire Services Officer Priya : முதல் முறையாக தீயணைப்புத் துறை பெண் அதிகாரி ஒருவர் IAS அதிகாரியாக நியமனம்

Fire Services Officer Priya - தமிழ்நாட்டைச் சேர்ந்த தீயணைப்புத்துறை அதிகாரி பிரியாவுக்கு ஐஏஎஸ் பதவி கொடுக்கப்பட்டுள்ளது :

தமிழ்நாட்டைச் சேர்ந்த தீயணைப்புத்துறை அதிகாரி பிரியாவுக்கு IAS பதவி (Fire Services Officer Priya) கிடைத்துள்ளது. IAS அதிகாரியாக ஒருவர் முதன் முறையாக தீயணைப்புத் துறையில் இருந்து நியமிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் (Non State Civil Service) ஒதுக்கீட்டிலிருந்து Priya Ravichandran ஐஏஎஸ் ஆக (Fire Services Officer Priya) நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் ஆனது இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல் முறையாக மாநில அரசு அல்லாத குடிமைப்பணிகள் ஒதுக்கீட்டில் IAS அந்தஸ்தை வழங்கியுள்ளது.

மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் பதவிக்கு நியமனம் பெறும் முறை :

மாநில அரசில் காலியாக உள்ள இடங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஆண்டுதோறும், குரூப் 1 அதிகாரிகளுக்கு மாநில அரசு பரிந்துரை அடிப்படையில், ஐஏஎஸ் அதிகாரிக்கான அந்தஸ்தை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் பிரியா ரவிச்சந்திரனை தேர்வு செய்து 2022-ம் ஆண்டுக்கான அறிவிப்பை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் பதவிக்கு நியமனம் பெற அரசு அதிகாரிகளாக பணிபுரிபவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்பார்கள். அதன்படி மாநில அரசு தனது விருப்ப அதிகாரங்களைப் பயன்படுத்தி, நேர்காணலை நடத்தும். SCS அல்லாத ஒதுக்கீட்டிலிருந்து காலியாக உள்ள IAS பதவியை நிரப்ப மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (UPSC) பெயர்களை பரிந்துரைக்கு அனுப்பும். UPSC தேர்வாணையம் ஆனது அவர்களுக்கு நேர்காணல் நடத்தி IAS அதிகாரிகளாக தேர்வு செய்யும். இப்படி IAS அதிகாரிகளாக நியமனம் பெறும் அதிகாரிகள் மீது அவர்கள் பணிக்காலத்தில் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கை History-யும் இருக்கக்கூடாது. மேலும் அந்த அதிகாரிகள் அவர்களது பணிக்காலத்தில் சிறப்பான முறையில் பணியாற்றி இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்புத் துறை பெண் அதிகாரி பிரியாவுக்கு 2022 தமிழ்நாடு கேடர் ஒதுக்கப்பட்டுள்ளது :

தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக கடந்த 2003-ஆம் ஆண்டு பிரியா ரவிச்சந்திரன் பணியில் சோ்ந்தாா். தீயணைப்புத் துறையில்  சிறப்பாக  பணியாற்றி, இணை இயக்குநர் நிலைக்கு உயா்ந்தாா். கடந்த 2012-ம் ஆண்டு சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கல்சா மகாலில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, தீயணைப்பு பணிகளில் ஈடுபட்ட நிலையில் பிரியா ரவிச்சந்திரன் காயமடைந்தார். ஆண்டுதோறும் மாநில அரசின் பரிந்துரைப்படி காலியாக உள்ள குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப் 1 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவா். இந்த மாநில அரசின் நடைமுறையின்படி, 2022-ஆம் ஆண்டு காலியாகவுள்ள இடத்துக்கு தீயணைப்புத் துறை இணை இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன் வெற்றிகரமாக  தோ்வாகியுள்ளாா்.

தீயணைப்புத் துறை இணை இயக்குநா் அதிகாரி பிரியா ரவிச்சந்திரனக்கு 2022 தமிழ்நாடு கேடர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. தீயணைப்புத் துறையில் இருந்து ஒருவா் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக (Fire Services Officer Priya) தோ்வாகியிருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply