First Diabetes Biobank Established In Chennai : நீரிழிவு நோயாளிகளுக்கு இந்தியாவின் முதல் பயோ பேங்க் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது

இந்தியா மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு நாடுகளில் நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக இன்றைய சூழலில் இளம் வயதினருக்கு நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. தற்போது இருக்கும் நீரிழிவு நோய் சிகிச்சை முறையை விட இன்னும் பல மடங்குமேம்படுத்தக் கூடிய வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக நீரிழிவு நோயாளிகளுக்கான ‘பயோ பேங்க்’ சென்னையில் (First Diabetes Biobank Established In Chennai) நிறுவப்பட்டுள்ளது.

பயோ பேங்க் அமைப்பு (First Diabetes Biobank Established In Chennai)

இதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான ICMR மற்றும் சென்னையின் முன்னணி நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையான MDRF ஆகிய இரண்டு முக்கிய அமைப்புகளும் இணைந்து இந்தியாவின் முதல்  உயிரி வங்கியை (First Diabetes Biobank Established In Chennai) சென்னை எம்டிஆர்எஃப் அலுவலகத்தில் நிறுவியுள்ளது. இந்த பயோ வங்கியின் மூலம் நீரிழிவு நோய்க்கான காரணங்கள், இந்தியாவில் எத்தனை வகையான நீரிழிவு நோய்கள் இருக்கின்றன உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்ள உயிர் மாதிரிகளை சேகரிப்பது போன்ற அனைத்து பணிகளுக்கும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகில் அதிக எண்ணிக்கையில் உயர் ரத்த சக்கரை அளவு கொண்ட மக்கள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

இளம் வயதினருக்கு அதிகரிக்கும் நீரிழிவு நோய்

அண்மையில் உலக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமாக நீரிழிவு நோயாளிகள் இருப்பதாகவும், சுமார் 14 கோடி மக்கள் நீரிழிவு நோய் வருவதற்கான ப்ரீ டயாபட்டிக் நிலையில் இருப்பதாகவும், மேலும் இந்தியாவில் தற்போது இளம் வயதினருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் ஆதரவுடன் பயோ வங்கி நிறுவப்பட்டுள்ளது

ஐசிஎம்ஆர் ஆதரவுடன் நிறுவப்பட்டுள்ள இந்த பயோ வங்கியின் முக்கிய நோக்கம் இந்தியா முழுவதும் உள்ள நீரிழிவு நோயாளிகளின் உயிரி மாதிரிகளை சேகரித்து அவர்களின் ஜெனிடிக் சார்ந்த ஆய்வு மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை சம்மந்தப்பட்ட ஆய்வு மற்றும் சுற்றுப்புற சூழல் ஆய்வு என 3 வகையான ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களுக்கு (First Diabetes Biobank Established In Chennai) எதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்கிறது என்பதையும், தற்போது அவர்களுக்கு வழங்கக்கூடிய சிகிச்சை முறையை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் போன்ற ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு அறிக்கை

தற்போது சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வரும் 2045 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 134 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் (First Diabetes Biobank Established In Chennai) என எச்சரித்துள்ளது. மேலும் இந்த நீரிழிவு நோய் காரணமாக பக்கவாதம், மாரடைப்பு, கிட்னி செயலிழப்பு, கோமா நிலைக்கு செல்வது, உறுப்புகள் சேதமடைவது போன்ற பல பிரச்சனைகளை மக்கள் சந்திக்க வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply