First Global Competence Center In TN : சென்னையில் Assurant நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மையம் ஆனது அமைய உள்ளது

First Global Competence Center In TN :

சான் ஃபிரான்ஸிஸ்கோ பயணத்தை முடித்த முதலமைச்சர் ஸ்டாலின் சிகாகோ சென்றார். சிகாகோ நகரில் உள்ள சில நிறுவனங்களுடன் தமிழக அரசு ஆனது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்னையில் Assurant நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (First Global Competence Center In TN) ஆனது முதலமைச்சர் முன்னிலையில் சிகாகோவில் 03.09.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது. இது இந்தியாவில் அமையவிருக்கும் முதல் உலகளாவிய திறன் மையம் ஆகும். ஈட்டன் நிறுவனத்தின் குளோபல் எனர்ஜி தலைவர் மேத்யூ ஹாக்மேன், அஷ்யூரண்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் பிஜு நாயர் மற்றும் உயர் அலுவலர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Fortune 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அஷ்யூரன்ட் நிறுவனம் (Assurant, Inc.) ஒன்றாகும். Assurant, Inc-ன் உலகளாவிய தலைமையகம் ஆனது அமெரிக்க நாட்டின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது. இந்த அஷ்யூரன்ட் நிறுவனமானது இடர் மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றது. இந்த அஷ்யூரன்ட் நிறுவனமானது சொத்து, விபத்து, நீட்டிக்கப்பட்ட சாதனங்களின் பாதுகாப்பு போன்ற பலவிதமான சிறப்பு மற்றும் முக்கிய சந்தை காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றது.

இந்த உலகளாவிய திறன் மையம் ஆனது 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைய உள்ளது. இந்த ஈட்டன் கார்ப்பரேஷன் (Eaton Corporation) நிறுவனம் ஆனது உலகளவில் 35 நாடுகளில் 208 இடங்களில் உற்பத்தி வசதி கொண்ட பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். இது தரவு மையம், இயந்திர கட்டிடம், குடியிருப்பு, விண்வெளி மற்றும் இயக்க சந்தைகளுக்கான உற்பத்தி மற்றும் பகிர்மான பணிகளை மேற்கொள்ளும் ஒரு மேலாண்மை நிறுவனம் ஆகும். இது உலகளவில் 35 நாடுகளில் 208 இடங்களில் உற்பத்தி வசதி கொண்ட நிறுவனம் ஆகும். சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை இந்த உலகளாவிய திறன் மையம் ஆனது விரிவாக்கும்.

Latest Slideshows

Leave a Reply