First Hindu Temple In UAE : பிப்.14ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

இஸ்லாமிய நாடான ஐக்கிய அமீரகத்தில் முதன் முதலாக ஒரு இந்து கோயில் (First Hindu Temple In UAE) ஆனது விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய நாடான ஐக்கிய அமீரத்திற்கு சென்று பணிபுரிந்து வருகிறார்கள். இதன் காரணமாக ஐக்கிய அமீரகத்தில் கணிசமான அளவுக்கு இந்திய மக்கள் தொகை ஆனது வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் துபாய்-அபுதாபியை இணைக்கும் ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது இந்து கோயில் ஆனது கட்டப்பட்டுள்ளது.

First Hindu Temple In UAE - ஐக்கிய அமீரகத்தில் கட்டப்பட்டு வருகின்ற இந்து கோயிலின் சிறப்புகள் :

ஐக்கிய அமீரகத்தில் திறக்கப்படவுள்ள முதல் இந்து கோயிலில் உள்ள சிறப்புகள் : 

  • இந்த இந்து கோயிலானது (First Hindu Temple In UAE) பளிங்குக் கற்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகின்றது.
  • ஐக்கிய அமீரக வானிலை வெப்பத்தைத் தாங்க ராஜஸ்தான் மணற்கற்கள் அங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மணற்கற்கள் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் என்பதால் ராஜஸ்தானின் மணற்கற்கள் எடுத்துச் செல்லப்பட்டு அங்கே  பயன்படுத்தப்பட்டுள்ளது. 
  • அதேபோல இந்த கோயிலில் இத்தாலிய பளிங்குக்கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • கணிசமான எண்ணிக்கையிலான பிங்க் மணற்கற்கள் வடக்கு ராஜஸ்தானில் இருந்து இந்த கோயிலுக்காக அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
  • இந்த கோயிலின் வடிவைமைப்பு ஆனது சிக்கலான தூண்களைக் கொண்டுள்ளது. மொத்தமாக 402 தூண்கள் உள்ளன.
  • பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றைக் காட்டும் ஒரு சிறப்பு குவிமாடமும் இந்த  கோயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த இந்து கோயிலில் விநாயகர் மற்றும் ராமர் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. பகவத்கீதை, ராமாயணம், மகாபாரதம் மற்றும் சிவபுராணத்தின் கதைகளின் காட்சிகள் ஆனது ஒவ்வொரு தூணிலும் சிற்பங்களாக அழகாக  செதுக்கப்பட்டுள்ளன.
  • மேலும் சகிப்புத்தன்மை, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சின்னமான கருதப்படும் ஒட்டகமும் இந்த இந்து கோயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
  • ராஜஸ்தானின் மக்ரானாவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கைவினை வல்லுஞர்களின் கைவண்ணத்தால் இந்த கோயிலின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
  • ராஜஸ்தான் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த திறமையான கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் ஆனது அபுதாபியில் உள்ள கோயிலின் முகப்பில் இடம்பெற்றுள்ளன.
  • இந்த இந்து கோயிலில் இரண்டு டோம்கள், 7 ஐக்கிய அமீரக மாகாணங்களைக் காட்டும் வகையில் 7 கோபுரங்கள் மற்றும் 12 குவிமாடங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த இந்து கோயிலில் (First Hindu Temple In UAE) இடம் பெற்றுள்ள ராஜஸ்தானின் கைவினைஞர்களின் படைப்புகள் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், “தலைமுறை தலைமுறையாகச் சிற்பங்களைச் செதுக்கி வருகின்ற எங்கள் ராஜஸ்தானிய குடும்பங்களால் இந்த இந்து கோயிலின் பெரும்பாலான சிற்பங்கள் ஆனது செதுக்கப்பட்டுள்ளது உண்மையிலேயே பெரும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றது” என்றனர். இந்த இந்து கோயிலில் (First Hindu Temple In UAE) உள்ள 83 சிற்பங்கள் ஆனது ராஜஸ்தானின் கைவினைஞர்களின் படைப்புகள் என்பது குறிபடத்தக்கது. பிரதமர் மோடி இந்த கோயிலை பிப். 14ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

Latest Slideshows

Leave a Reply