First Hydrogen Train In India : ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படவுள்ளது

இந்தியாவில் விரைவில் First Hydrogen Train ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த Hydrogen Train ஆனது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயக்கப்பட உள்ளது. இந்திய ரயில்வே துறை ஆனது ரயில்வே போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் விதமாக முதல் முறையாக ஹைட்ரஜனால் இயங்கும் ரயிலை அறிமுகப்படுத்தப் (First Hydrogen Train In India) போவதாக அறிவித்து உள்ளது. ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் மார்ச் 31, 2025 ஆம் தேதிக்குள் இந்த ரயில் இயக்கம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

First Hydrogen Train In India

First Hydrogen Train In India - Platform Tamil

இந்திய ரயில்வே துறையின் இந்த முயற்சி ஆனது இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் ஒரு முக்கிய கட்டமாக விளங்கும். இந்த முயற்சியின் மூலம், கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த (First Hydrogen Train In India) முடியும். சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிகரமாக செயல்பட்டு இந்திய ரயில்வே துறை ஹைட்ரஜன் ரயில்களை தொடங்க உள்ளது. இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் இது ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.

ஹைட்ரஜனால் இயங்கும் ரயில்கள் புதிய தொழில்நுட்பமான ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை (Fuel Cells) பயன்படுத்தி இயக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தில் கார்பன் வெளியேற்றம் ஆனது நடைபெறுவதில்லை. இது வெறும் நீரையும் வெப்பத்தையும் மட்டுமே வெளியிட்டு இயங்கும். இந்த ஹைட்ரஜன் ரயில்கள் 110 கி.மீ/மணிக்கு செல்லும் திறன் கொண்டவையாக உருவாக்கப்பட உள்ளன. இந்த ஹைட்ரஜன் ரயில்கள் 1,200 ஹெச்பி சக்தியுள்ள ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை பயன்படுத்தி (First Hydrogen Train In India) இயங்கும். இவை ஒரே நேரத்தில் 2,638 பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் ரயில்கள் டீசல் ரயில்களை விட பல சிறப்பம்சங்களை வழங்கும். இது இயற்கையை நோக்கிய ஒரு பெரிய முன்னேற்றம் ஆகும்.

இந்திய அரசு ஆனது நிலையான போக்குவரத்து, கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் திட்டத்தை ஜெர்மனி, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே வெற்றிகரமாக (First Hydrogen Train In India) செயல்படுத்தியுள்ளன. இந்த வெற்றிகரமான நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியா இணைய உள்ளது. அதிக பயணிகள் ஓட்டம் உள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடம் தேர்வு பகுதியாக செய்யப்பட்டுள்ளது. இந்த ஹைட்ரஜன் ரயில்கள் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு, பிற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.

Latest Slideshows

Leave a Reply