First Private Lander On The Moon : 'ஒடிசியஸ்' மூன் லேண்டரை ஸ்பேஸ்எக்ஸ் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியுள்ளது

First Private Lander On The Moon :

Intuitive Machines ஐ.எம் 1 திட்டத்தில் முதல் தனியார் லேண்டர் வெற்றிகரமாக நிலவுக்கு (First Private Lander On The Moon) அனுப்பப்பட்டுள்ளது. வெற்றிகரமாக தரையிறங்கினால் நிலவில் கால்பதித்த முதல் தனியார் லேண்டர் என்ற சாதனையைப் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெறும். ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் நிலவின் முதல் தனியார் லேண்டரான “ஒடிசியஸ்” மூன் லேண்டர் வெற்றிகரமாக (First Private Lander On The Moon) அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து  “ஒடிசியஸ்” மூன் லேண்டர் ஏவப்பட்டது. ஹூஸ்டனை தளமாகக் கொண்ட Intuitive Machines  தனியார் “ஒடிஸியஸ்” மூன் லேண்டரை தயாரித்தது. இந்த ராக்கெட்டில் நோவா-சி லேண்டரும் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது.

ஒடிஸியஸ் திட்டம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால் நிலவில் கால்பதித்த முதல் தனியார் லேண்டர் என்ற சாதனையைப் பெறும். இதற்கு முன்னதாக 2019-ல் இஸ்ரேல் நாட்டின் பெரேஷீட் மற்றும்  2023-ல் ஜப்பானின் ஹகுடோ, இந்தாண்டில் அமெரிக்காவின் பெரெக்ரின் ஆகிய தனியார் நிறுவனங்கள் நிலவில் தரையிறங்க முயன்றன. ஆனால் அந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்த “ஒடிசியஸ்” மூன் லேண்டர் நிலவில் இரவு தொடங்கும் வரை லேண்டர் மற்றும் அதன் பேலோடுகள் 7 நாட்கள்  தொடர்ந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் 3 போலவே நோவா-சி லேண்டரும் நிலவின் தென் துருவ பகுதிக்கு  அருகில் தரையிறக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

First Private Lander On The Moon : திட்டம் குறித்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கூறுகையில் ஐ.எம்.1 திட்டம் சந்திர மேற்பரப்பு சூழல் பற்றிய நுண்ணறிவுகளை நமக்கு வழங்கும். இது மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஸ்டார்ஷிப் மற்றும்  நாசாவின் ஆர்ட்டெமிஸ் நிலவு பணிகளுக்கு உதவும் என தெரிவித்துள்ளது. மேலும்  ஆர்ட்டெமிஸ் 3 பணிக்கு ஸ்டார்ஷிப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தில் மொத்தம் 4 விண்வெளி வீரர்கள் பிளாக் 1 உள்ளமைவுடன் Space Launch System-ல் நிலவு சுற்றுப் பாதைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply