அமெரிக்காவின் First Solar நிறுவனம் தமிழ்நாட்டில் ₹5600 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் சோலார் (First Solar) நிறுவனம் தமிழ்நாட்டில் ₹5600 கோடி முதலீட்டு முடிவு ஆனது இந்தியாவில் ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார முன்னேற்றத்தை பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழக அரசு ஆனது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும் 07/01/2024 இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), 08/01/2024 நாளையும் (திங்கட்கிழமை) நடத்தப்படுகிறது. தமிழகத்திற்கு உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நோக்கத்துடன் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆனது  நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சிறந்த பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஆனது தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த மாநாட்டில் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

First Solar நிறுவனம் தமிழ்நாட்டில் ₹5600 கோடி முதலீடு :

தமிழ்நாட்டில் ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மின்சாரம் மற்றும் சோலார் பேனல் தொடர்பான நிபுணரான பாலு, “அமெரிக்காவின் First Solar நிறுவனம் தமிழ்நாட்டில் ₹5600 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது” என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் ₹5600 கோடி முதலீடு செய்ய அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் சோலார் (First Solar) நிறுவனம் முடிவு செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் இந்தியா லெவலில் இந்த ₹5600 கோடி முதலீடு ஆனது பெரிய சாதனையாக கருதப்படுகிறது. மேலும் இந்த First Solar நிறுவன முதலீடு ஆனது இனி வரும் காலங்களில் பல வெளிநாட்டு சூர்ய மின்சக்தி தளவாடங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாடு பெருவதற்கான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.

Godrej நிறுவன Light House Project (Global FMCG) ஒப்பந்தம் :

Godrej நிறுவனம் தொடங்க இருக்கும் Light House Project (Global FMCG) நிறுவனத்துக்கான ஒப்பந்தம் 07/01/2024 இன்று முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆகி உள்ளது. தமிழ்நாடு அரசு ஆனது இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ & Differently Abled ஆக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் இவ்வகையான நிபந்தனை ஆனது அறிமுகப்படுத்தப்படுகிறது. தொழிற்துறையினர் இவ்வகையான நிபந்தனை உலகிலேயே முதன்முறை எனச் சிறப்பாக பாராட்டுகிறார்கள்.

பெகாட்ரான் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.1,000 கோடி முதலீடு :

தமிழகத்தில் பெகாட்ரான் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் பெகாட்ரான் இந்தியா பிரைவேட் லிமிடெட் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது கையெழுத்தானது. தமிழக அரசு இந்த நிறுவனம் ஆனது 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த மாநாட்டில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முதலீட்டாளர்களை வரவேற்றார். தமிழகத்தில் உள்ள தொழில் சூழல்கள் பற்றி தனி அரங்குகளை தமிழக அரசு ஆனது அமைத்திருக்கிறது. இதில் சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றிற்கும் தனித்தனி அமர்வுகள் ஆனது ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply