First Symphony Music Released : இளையராஜாவின் முதல் சிம்ஃபொனி இசை லண்டனில் வெளியிடப்பட்டது

மேற்கத்திய இசைக்கலைஞர்கள் மொசாட், பீத்தோவன் வரிசையில் இடம் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை (First Symphony Music Released) இளையராஜா பெற்றுள்ளார். ஆசியாவிலேயே சினிமா துறையில் இருந்து முழு சிம்ஃபொனி தொகுப்பை எழுதி இசையமைத்த முதல் இசைக்கலைஞர் என்ற பெருமையை இளையராஜா அடைந்துள்ளார். இளையராஜாவின் முதல் சிம்ஃபொனி Valiant மார்ச் 8 அன்று லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில், இந்திய நேரப்படி அதிகாலை 12:30 மணிக்கு அரங்கேற்றப்பட்டது. இளையராஜாவின் இசை வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

சிம்பொனி (First Symphony Music Released)

 சிம்ஃபொனி மேற்கத்திய இசையை அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் மற்றும், வயலின், செல்லோ, பியானோ, டிரம்பட், டிரம்ஸ் ஆகிய இசைக்கருவிகள் கொண்டு இசைக்கப்படும் ஒரு இசை முறை ஆகும். சிம்ஃபொனிக்காக பிரத்யேகமாக எழுதப்பட்ட இசையை இந்த கலைஞர்கள் வாசிப்பார்கள். இளையராஜாவின் தற்போதைய வயது 81 ஆகும். இந்த வயதில் சிம்ஃபொனி இசையை முழுவதும் எழுதி முடிக்க வெறும் 34 நாட்களை தான் எடுத்துக் கொண்டதாக இளையராஜா தெரிவித்துள்ளார். இளையராஜாவின் சிம்ஃபொனி இசை கோர்வையை லண்டனின் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவினர் (First Symphony Music Released) இசைத்தனர். தான் இசையமைத்த சில திரைப்படப் பாடல்களையும் இந்த நிகழ்ச்சி நடைபெறும் போது இளையராஜா பாடி இசைத்தார். மொத்தம் 3,665 இருக்கைகள் உடைய ஈவென்டிம் அப்போலோ அரங்கம் நிறைந்து காணப்பட்டது. அப்போலோ அரங்கத்தின் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.

சிம்பொனி இசை நிகழ்ச்சி 13 தேசங்களில் நடைபெற உள்ளது

First Symphony Music Released - Platform Tamil

மேற்கத்திய இசைக்கலைஞர்கள் மொசாட், பீத்தோவன் உள்ளிட்டோரால் கவரப்பட்டு, அவர்களை போலவே சிம்ஃபொனி இசைக்குறிப்பை சொந்தமாக எழுதி, அதை அரங்கேற்ற வேண்டும் என்ற இளையராஜாவின் பல ஆண்டு கனவு ஆனது நிறைவேறியது.

இளையராஜாவின் இசைப்பயணம்

தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்ற கிராமத்தில் பிறந்த இளையராஜா அன்னக்கிளி-யில் தொடங்கி ‘விடுதலை 2’ வரை ஏறக்குறைய 50 ஆண்டுகளாக இசைப்பயணம் (First Symphony Music Released) செய்துள்ளார். 1400 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார். மேற்கத்திய இசை, கர்நாடக இசை, நாட்டுப்புற இசை என அனைத்து வடிவங்களையும் படைத்திருக்கிறார்.

இவர் இதுவரை ஐந்து முறை இசைக்காக தேசிய விருது பெற்றுள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை சாகர சங்கமம், ருத்ர வீணா என இரு தெலுங்கு படங்களுக்கும், சிந்து பைரவி என்ற தமிழ் படத்திற்கும் பெற்றுள்ளார். இளையராஜா 2018 ஆம் ஆண்டு (First Symphony Music Released) இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருதினை பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டின் முதலமைச்சர், பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் அவரை நேரில் சந்தித்தும், மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply