First Time Introduced By Hydrogen Train : இந்தியாவில் முதல் முறையாக 'ஹைட்ரஜன் இரயில்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஜப்பான், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், போன்ற வெளிநாடுகளில் மட்டும் பயன்பாட்டில் இருக்கும் ஹைட்ரஜன் இரயில் இந்தியாவில் முதல் முறையாக (First Time Introduced By Hydrogen Train) இயக்கப்பட உள்ளது. இந்த ஹைட்ரஜன் இரயில் சேவை 2025-ம் ஆண்டு மக்களின் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் இதற்கான சோதனை ஓட்டம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இரயில்வே துறையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. இதற்கு முன்னால் இந்தியா முழுவதும் ‘வந்தே பாரத்’ இரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த வரிசையில் ஹைட்ரஜன் (Hydrogen Train) மூலம் இயங்கும் இரயில் சேவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஹைட்ரஜன் இரயில் சேவை மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும். இதன் காரணமாகத்தான் ஹைட்ரஜன் இரயிலை உருவாக்க இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் இந்த ஹைட்ரஜன் இரயில் தயாரிக்கும் பணியை சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையிடம் வழங்கப்பட்டது.

ஹரியானா மாநிலத்தில் இயக்கப்படுகிறது :

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் மற்றும் சோனிபட் ஆகிய நகரங்களுக்கு இடையே 89 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த முதல் ஹைட்ரஜன் இரயில் (Hydrogen Train) சேவையானது இயக்கப்படுகிறது. 

First Time Introduced By Hydrogen Train - 2800 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது :

இந்தியாவில் இந்த ஹைட்ரஜன் இரயில் சேவை திட்டம் ரூ.2800 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இதுமட்டுமல்லாமல் ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு மையம் ரூ.600 கோடி மதிப்பில் உருவாக்கப்பட உள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் நகரில் உள்ள பாலிமர் எலக்ட்ரேலைட் மெம்பரேன் இந்த இரயிலுக்கு தேவையான ஹைட்ரஜன் எரிபொருளை வழங்கும்.

2030-ம் ஆண்டுக்குள் 'ஜீரோ கார்பன்' வெளியீடு இலக்கு :

இந்த ஹைட்ரஜன் இரயில் திட்டத்தின் மூலம் இந்தியன் இரயில்வே 35 ஹெரிடேஜ்  இரயில்களை (Heritage Train) உருவாக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் பாரம்பரியமான இடங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இந்த ஹெரிடேஜ் இரயில் இயக்கப்படும் என  இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் “ஜீரோ கார்பன்” வெளியீடு என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஹைட்ரஜன் இரயில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply