First Transgender Railway Ticket Inspector : தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் சிந்து

தெற்கு ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை மூன்றாம் பாலினத்தவரான சிந்து பெற்றுள்ளார் :

தமிழ் நாட்டில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் மீது இருந்து வந்த சமூகத்தின் வித்தியாசமான பார்வை  மாறும் விதத்தில் தமிழக அரசும் 3ம் பாலினத்தவருக்கு பல நல்ல சிறப்பான திட்டங்களை திறன்பட செயல்படுத்தி வருகின்றது. சக மனிதர்களாக 3ம் பாலினத்தவர்களையும் கருதும் மனப்பக்குவம் ஏற்பட வேண்டும் என்று கருதிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருநங்கைகள், திருநம்பிகள் என்று அழைக்கும் சொல்லை தமிழ்ச்சமூகத்துக்கு அளித்தார். தற்போது அதற்கேற்றவாறு, வாய்ப்பு கிடைத்தால் எதையும் சாதித்து காட்டுவோம் என்று களமிறங்கிவிட்டார்கள் 3ம் பாலித்தனர்கள். இன்றைய நிலையில் 3ம் பாலித்தனர்கள் வக்கீலாக, போலீசாக, டாக்டராக மற்றும் என்ஜினீயர்களாக சமுதாயத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். பாலித்தனர்கள் தங்களுக்கு சமுதாயத்தில் உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கான அத்தனை போராட்டங்களையும் முன்னெடுத்து சாதித்து கொண்டிருக்கிறார்கள். சுயதொழிலில் தொடங்கி மத்திய மற்றும் மாநில அரசு பணிகளிலும் 3ம் பாலித்தனரான திருநங்கைகள் அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.

First Transgender Railway Ticket Inspector - திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து பதவியேற்றுள்ளார் :

அந்த வகையில் நாகர்கோவிலை சேர்ந்த திருநங்கை சிந்து என்பவர் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஒரு திருநங்கை ரயில்வேயின் டிக்கெட் பரிசோதகர் (First Transgender Railway Ticket Inspector) ஆகியிருக்கிறார். தெற்கு ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பையும் இதன்மூலம் சிந்து பெற்றுள்ளார். பி.லிட் தமிழ் இலக்கியம் படித்த சிந்து 19 வருஷத்துக்கு முன்பு, எர்ணாகுளத்தில் ரயில்வே பணியில் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

14 வருடங்களுக்கு முன்பு எர்ணாகுளத்தில் இருந்து  திண்டுக்கல்லுக்கு டிரான்ஸ்பர் ஆகி ரயில்வே மின்சார பிரிவில் பணியாற்றி வரும் போது திடீர்னு விபத்து ஏற்பட்டு, கையில் காயம் ஏற்படவும், மின்சார பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது சிந்து டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்து டிக்கெட் பரிசோதகர் பதவி (First Transgender Railway Ticket Inspector) ஏற்றுள்ளார். திருநங்கை சிந்துக்கு ரயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், முதன்மை வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி, எஸ்.ஆர்.எம். தொழிறசங்க கோட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் செயலாளர் ரபீக் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

மனம் தளராமல் நன்றாக முன்னேற வேண்டும் - திருநங்கை சிந்துவின் உரை :

“திருநங்கைகள் நாம் திருநங்கையாக பிறந்து விட்டோமே? என்ன செய்வது என்றெல்லாம் சோர்ந்து போகாமல் மற்றும் மனம் தளராமல் நன்றாக படித்து, ஒரு நல்ல சிறப்பான நிலைமைக்கு வரவேண்டும். எல்லாருக்கும் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். அதனால் திருநங்கைகள் தங்களுக்கு மட்டுமே பிரச்சனை என்று நினைத்து மனம் தளரகூடாது. எந்த உயரத்தையும் கல்வி மற்றும் உழைப்பு இருந்தால் எட்ட முடியும். அதை திருநங்கைகள் தங்கள் மனதில் கொண்டு முன்னேற வேண்டும்” என்று சிந்து (First Transgender Railway Ticket Inspector) சொல்கிறார். இந்த சமூகம் ஒரு காலத்தில் திருநங்கைகளை வீட்டை விட்டும், ஊரை விட்டும் துரத்தப்பட்டு வந்த நிலை மாறி உள்ளது. இன்று திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருவதுடன், இந்த சமூகத்தின் தவறான பார்வையில் இருந்தும் நீங்கி வரலாறு படைத்து கொண்டிருப்பது, வரவேற்கத்தக்கது மற்றும் போற்றத்தக்கது ஆகும்.

Latest Slideshows

Leave a Reply