First Tribal Woman Judge In Civil Court : சிவில் கோர்ட்டில் நீதிபதியான மலைவாழ் பெண் ஸ்ரீபதி

தமிழகத்தின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதியாக பதவியேற்ற (First Tribal Woman Judge In Civil Court) திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஸ்ரீபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

First Tribal Woman Judge In Civil Court :

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையை அடுத்து உள்ள புலியூர் மலை கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி. 23 வயதாகும் ஸ்ரீபதி தனது ஆரம்பக் கல்வியை ஏலகிரி மலையில் உள்ள ஒரு பள்ளியில் பயின்றார், பின்னர் அப்பகுதியில் BA படித்தார், பின்னர் BL சட்டம் படிக்க சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஸ்ரீபதி படிக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு TNPSC சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால், இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த ஸ்ரீபதி அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பிறகு தேர்வுக்கு முந்தைய நாள் ஸ்ரீபதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் குறைந்தது ஒரு வாரமாவது ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால், நீதிபதியாக வேண்டும் என்ற லட்சியத்தில் ஸ்ரீபதி தேர்வு எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மேலும் ஸ்ரீபதியின் கணவர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் பிரசவம் முடிந்த 2ம் நாள் காரில் சென்னைக்கு சென்று சிவில் நீதிபதி தேர்வு எழுதினார். சமீபத்தில் வெளியான TNPSC சிவில் நீதிபதி தேர்வில் சிவில் நீதிபதியாக ஸ்ரீபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதி என்ற பெருமையை ஸ்ரீபதி (First Tribal Woman Judge In Civil Court) பெற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து :

சமூக நீதி என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றவர்களின் வெற்றிதான் தமிழகத்தின் பதில் என்று செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி தனது 23வது வயதில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தாழ்த்தப்பட்ட மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இளம் பெண் ஒருவர் இந்நிலையை எட்டியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணை மூலம் ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டதை (First Tribal Woman Judge In Civil Court) அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவரது தாயாருக்கும் கணவருக்கும் எனது  பாராட்டுக்கள்”.

Latest Slideshows

Leave a Reply