First Week Leo Collection : வசூலில் வேட்டையாடும் விஜய் | பாக்ஸ் ஆபிஸை அலறவிட்ட லியோ

First Week Leo Collection :

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் வார வசூல் (First Week Leo Collection) குறித்த அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். அதற்கு முன் இருவரும் இணைந்த மாஸ்டர் படம் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்து  நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு, விஜய் நடித்த பீஸ்ட், வாரிசு ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சரியாக போகாததால், லியோவை மெகா ஹிட் படமாக்க விஜய் கடுமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இதனால் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வரும் என்று கருதப்பட்டது. ஆனால் லியோவின் பாடல்களைத் தவிர எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. படம் வெளியாக ஒரு மாதம் இருந்த நிலையில் படத்தின் போஸ்டர்கள் பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இதனிடையே லியோ ஆடியோ வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ரசிகர்களின் பாதுகாப்பு நலன் கருதி இசை வெளியீட்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

First Week Leo Collection : இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. ‘லியோ’ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களுடன் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. படத்தின் பாடல்கள் ரசிகர்களின் பிளே-லிஸ்ட்டில் ரிபீட் மோடில் ஒலித்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வசூல் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘லியோ’ திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.461 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் (First Week Leo Collection) என்ற சாதனையை ‘லியோ’ படைத்துள்ளது. ரசிகர்களின் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படம் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ பாக்ஸ் ஆபிஸில் (First Week Leo Collection) புயலைக் கிளப்பியதால், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை நிரப்பி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply