First woman Brigadier in Pakistan Army : பாகிஸ்தான் ராணுவத்தில் வரலாறு படைத்துள்ள டாக்டர் ஹெலன் மேரி ராபர்ட்ஸ்

சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பெண் ஒருவர் ‘Brigadier’ பதவி பெற்றுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தில் 1998 முதல் டாக்டர் ஹெலன் பணியாற்றி வருகிறார். கடந்த 26 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஹெலன் மேரி ராபர்ட்ஸ் பிரிகேடியராக (First woman Brigadier in Pakistan Army) பதவி உயர்வு பெற்றுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பிரிகேடியராக ஹெலன் மேரி ராபர்ட்ஸ் பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தில் 1998 முதல்  டாக்டர் ஹெலன் பணியாற்றி வரும் இவர்  கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஒரு மூத்த நோயியல் நிபுணர் ஆவார். பாகிஸ்தானின் ராணுவ மருத்துவப் படையில் அதன் முதல் பெண் சர்ஜன் ஜெனரலாக பணியாற்றியர். கடந்த 26 ஆண்டுகளாக இவர் பாகிஸ்தானின் ராணுவ மருத்துவப் படையில் பணியாற்றி வருகிறார்.

பாகிஸ்தான் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின்படி, பாகிஸ்தான்  நாட்டில் 96.47 சதவீதம் மக்கள் முஸ்லிம்கள் ஆவர். 2.14 சதவீதம் மக்கள் இந்துக்கள் ஆவர். 1.27 சதவீதம் மக்கள் கிறிஸ்தவர்கள் ஆவர். 0.09 சதவீதம் மக்கள் அஹ்மதி முஸ்லிம்கள் ஆவர். மற்றும் 0.02 சதவீதம் மக்கள் உள்ளனர். டாக்டர் ஹெலன் 96.47 சதவீதம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் பிரிகேடியர் பதவியைப் பெற்ற 1.27 சதவீதம் கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை மக்கள் சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வாழ்த்து உரை :

பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பிரிகேடியராக  ஹெலன் பதவி உயர்வு (First woman Brigadier in Pakistan Army) பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது, “ஹெலன் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கடின உழைப்பாளி பெண்கள் நாட்டிற்கு தனித்துவமாக சேவையாற்றும் பெண்கள் குறித்து இந்த முழு தேசமும் பெருமிதம் கொள்கிறது. பிரிகேடியராக பதவி உயர்வு பெற்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்ற பிரிக் ஹெலன் மேரி ராபர்ட்ஸை நானும் தேசமும் வாழ்த்துகிறோம்” என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் கடந்த ஆண்டு ராவல்பிண்டியில் உள்ள கிறிஸ்ட் சர்ச்சில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, நாட்டின் வளர்ச்சியில் சிறுபான்மை சமூகத்தினர் ஆற்றிய பங்கை பாராட்டி உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply