First Women Chief Minister Of Punjab : மரியம் நவாஸ் பாகிஸ்தான் பஞ்சாபின் முதல் பெண் முதலமைச்சர்

First Women Chief Minister Of Punjab :

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள தேர்தலில், பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்வராக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் (First Women Chief Minister Of Punjab) பதவியேற்றார். முதல்-மந்திரிக்கு வழங்கக்கூடிய பாதுகாப்பு மரியம் நவாசுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதன்மூலம் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் மந்திரி என்ற பெருமையை மரியம் நவாஸ் (First Women Chief Minister Of Punjab) பெறுகிறார். பிரதமராக 3 முறை பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் (வயது 50), பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்-மந்திரியாகியுள்ளார். மரியம் நவாஸ் PML-N கட்சியின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். நவாஸ் ஷெரீப்பின் சிறந்த அரசியல் வாரிசாக மரியம் நவாஸ் அறியப்படுகிறார். 23.02.2024 அன்று பஞ்சாப் மாகாணத்தின் புதிய சட்டசபை கூடியது. இதில், மரியம் நவாஸ் முதலமைச்சராகவும், பிற தலைவர்கள் அமைச்சராகவும் பதவியேற்றனர்.

PML-N கட்சி புதிய அரசை அமைத்தது :

கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் பொது தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை உடனடியாக நடந்து முடிந்த போதிலும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த பொது தேர்தலில், பஞ்சாப் மாகாண சட்டசபைக்கான வாக்குப்பதிவும் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இருக்கும் 5 மாகாண சட்டப்பேரவையில், பாகிஸ்தானின் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியானது 12 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தில் மொத்தம் 137 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த பொது தேர்தலில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியை எதிர்த்து போட்டியிட்ட இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் 113 இடங்களை கைப்பற்றினர்.

முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் மகனும் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 10 இடங்களை கைப்பற்றினர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியில் இம்ரான் கானின் ஆதரவு பெறாத வேறு 20 சுயேச்சைகள் முன்பே இணைந்துவிட்டனர். பஞ்சாப் ஆளுநர் பாலிகுர் ரஹ்மான் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தார். இந்தச் சூழலில், பிஎம்எல்-என் கட்சி புதிய அரசை பிபிபி மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் அமைத்தது. ரம்ஜான் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு சிறப்பு தொகுப்புகள் வழங்கப்படுவது வழக்கம். பஞ்சாபில் இந்த ரம்ஜான் சிறப்பு தொகுப்புகளை முன்கூட்டியே வழங்க வேண்டும் என மரியம் நவாஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த ரம்ஜான் சிறப்பு தொகுப்பில் மாவு, நெய், பருப்பு  மற்றும் சர்க்கரை உள்ளிட்டவை அடங்கியிருக்கும். மரியம் நவாஸ் சில அதிரடி நடவடிக்கையில் பொறுப்பேற்பதற்கு முன்னரே இறங்கியுள்ளதால் பஞ்சாப் மாகாணத்தில் மரியம் நவாஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply