Flipkart Big Diwali Sale 2023 : Flipkart-ல் பிக் தீபாவளி சேல் நாளை அறிமுகமாகிறது

Flipkart Big Diwali Sale 2023 :

பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை (Flipkart Big Billion Days Sale) சமீபத்தில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து Flipkart பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali Sale 2023) எனும் சிறப்பு விற்பனை தொடங்க இருக்கிறது பிளிப்கார்ட் நிறுவனம். தற்போது இந்த புதிய சிறப்பு விற்பனை தேதி வெளியிட்டுள்ளது. அதாவது நவம்பர் 2-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை “Flipkart Big Diwali Sale 2023” எனும் சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட், லேப்டாப், ஸ்பீக்கர்கள், இயர்பட்ஸ் உள்ளிட்ட பல சாதனங்களை குறைந்த தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

மேலும் பிளிப்கார்ட் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையில் (SBI) கிரெடிட் கார்டை பயன்படுத்தி சாதனங்களை வாங்கும் பயனர்களுக்குக் கூடுதல் தள்ளுபடி வழங்குகிறது. அதேபோல் எஸ்பிஐ வங்கி கார்டை பயன்படுத்தி (EMI) முறையில் பொருட்களை வாங்கும் பயனர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த “Flipkart Big Diwali Sale 2023” சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐபோன் 14 மாடல் ஆனது குறைந்த விலையில் வாங்க முடியும் என்று தகவலும் வெளியாகியுள்ளது. இதுதவிர ஐபோன் 13,  ஐபோன் 12 போன்ற மாடல்களையும் குறைந்த தள்ளுபடி விலையில் வாங்கக் முடியும். குறிப்பாக எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சோனி, நிகான் மற்றும் கேனான் போன்ற சிறப்பான முன்னணி நிறுவனங்களின் கேமராக்கள் கூட தள்ளுபடி விலையில் கிடைக்கும் எனவும் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஏசி, குளிர்சாதனப் பெட்டிகள், மைக்ரோவேவ் போன்ற அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் பிளிப்கார்ட் தள்ளுபடி வழங்குகிறது என தெரிவித்துள்ளது.

Moto Edge 40 Neo சிறப்பம்சம் :

‘Flipkart Big Diwali Sale 2023’ எனும் இந்த சிறப்பு விற்பனையில் பலரும்  எதிர்பார்க்கும் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Moto Edge 40 Neo) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இப்போது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனின் சிறப்பம்சங்களை பார்க்கலாம். மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் உடன் வருகிறது.

Moto Edge 40 Neo Camera :

50 MB மெயின் கேமரா + 13 MB அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 32MB செல்பீ கேமராவும் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன். இதுதவிர LED பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மாடலில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரையில் வை-பை (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன. குறிப்பாக இந்த Flipkart Big Diwali Sale 2023 சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Slideshows

Leave a Reply