Flipkart Monumental Sale 2025 : பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது

அமேசான் நிறுவனத்தை தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்கான சிறப்பு விற்பனைக்கான தேதியை அறிவித்துள்ளது. இந்த முறை குடியரசு தின விற்பனையை ‘பிளிப்கார்ட் மொனுமென்டல் விற்பனை 2025’ (Flipkart Monumental Sale 2025) என்ற பெயரில் நடத்த உள்ளது. மேலும் இந்த பிளிப்கார்ட் மொனுமென்டல் சிறப்பு விற்பனையானது வரும் ஜனவரி 14-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாட்களில் பல தயாரிப்புகளின் மீது வாடிக்கையாளர்கள் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெறலாம். மேலும் இந்த குடியரசு தின சிறப்பு விற்பனை பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு (Flipkart Plus Members) ஒரு நாள் முன்னதாக ஜனவரி 13 அன்று தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் விவரம் (Flipkart Monumental Sale 2025)

இந்த பட்டியலில் சாம்சங், ரியல்மி, டெக்னோ, ரெட்மி, ஹானர், ஒப்போ, மோட்டோரோலா, ஐக்யூ, விவோ, போக்கோ, லாவா ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் (Flipkart Monumental Sale 2025) உள்ளன. மேலும் ஒன்பில்ஸ் நோர்ட் 4, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி இந்த ஸ்மார்போன்களும் பிளிப்கார்ட் மொனுமென்டல் சிறப்பு விற்பனை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐக்யூ ஸ்மார்ட்போன் பட்டியல்

இந்த பிளிப்கார்ட் மொனுமென்டல் சிறப்பு விற்பனையில் ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ 5ஜி, ஐக்யூ 13 5ஜி, ஐக்யூ நியோ 9 ப்ரோ 5ஜி, ஐக்யூ 12 5ஜி, ஐக்யூ இஸட்9எஸ் 5ஜி ஆகிய மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சாம்சங் ஸ்மார்ட்போன் பட்டியல்

இந்த பிளிப்கார்ட் மொனுமென்டல் சிறப்பு விற்பனையில் (Flipkart Monumental Sale 2025) சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்05 5ஜி ஆகிய மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரியல்மி ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

இந்த பிளிப்கார்ட் மொனுமென்டல் சிறப்பு விற்பனையில் (Flipkart Monumental Sale 2025) ரியல்மி நார்சோ 70எக்ஸ், ரியல்மி நார்சோ என்61, ரியல்மி ஜிடி 6டி, ரியல்மி நார்சோ 70 டர்போ, ரியல்மி ஜிடி 7 ப்ரோ, ரியல்மி நார்சோ என்65 ஆகிய மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரெட்மி ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

இந்த பிளிப்கார்ட் மொனுமென்டல் சிறப்பு விற்பனையில் ரெட்மி ஏ4 5ஜி, ரெட்மி நோட் 14 5ஜி, ரெட்மி 13சி 5ஜி, ரெட்மி நோட் 13 ப்ரோ ஆகிய மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டெக்னோ ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

இந்த பிளிப்கார்ட் மொனுமென்டல் சிறப்பு விற்பனையில் (Flipkart Monumental Sale 2025) டெக்னோ பாப் 9 5ஜி, டெக்னோ போவா 6 நியோ 5ஜி, டெக்னோ பாப் 9 4ஜி, டெக்னோ பாண்டம் வி போல்ட் 5ஜி ஆகிய மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply