Flipkart Republic Day Sale 2024 விற்பனை ஜனவரி 14 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது
பிளிப்கார்ட்ன் (Flipkart) நிறுவனம் 2024 குடியரசு தின விற்பனைக்கான (Flipkart Republic Day Sale 2024) தேதிகளை அறிவித்துள்ளது. தமிழர்கள் இதை பொங்கல் சிறப்பு விற்பனையாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சிறப்பு விற்பனை எப்போது தொடங்கி எப்போது முடியும்? இதன்கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது டிஸ்கவுண்ட் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது முழு விவரங்களை பார்க்கலாம்.
இந்த குடியரசு தின சிறப்பு விற்பனையானது ஜனவரி 14 ஆம் தேதி முதல் தொடங்க ஜனவரி 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனை குறித்த டீசர் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் போன்களின் பட்டியலையும் பிளிப்கார்ட் வெளியிட்டுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம் மெம்பர்களுக்கு இந்த விற்பனை நிகழ்விற்கான அணுகல் ஒரு நாளுக்கு முன்னதாகவே கிடைக்கும் என தெரிவித்துள்ளது. அதாவது பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கான குடியரசு தின விற்பனையானது (Flipkart Republic Day Sale 2024) ஜனவரி 13 ஆம் தேதியே தொடங்கும்.
Flipkart Republic Day Sale 2024 - தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் :
ஐபோன் 12 (iPhone 12), ஐபோன் 13 (iPhone 13), ஐபோன் 14 (iPhone 14), ஐபோன் 15 (iPhone 15) போன்ற ஆப்பிள் நிறுவங்களின் மாடல்கள் மீது எதிர்பார்க்காத அளவிலான நேரடி தள்ளுபடி கிடைக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் பிக்சல் 7A (Google Pixel 7A), கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8), சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ (Samsung Galaxy S21 FE 5G), மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo), சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி (Samsung Galaxy S22 5G) போன்ற ஸ்மார்ட்போன்களும் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
மேலும் ஒப்போ ரெனோ 10 ப்ரோ (Oppo Reno 10 Pro), ரியல்மி 11 (Realme 11), விவோ டி2 ப்ரோ (Vivo T2 Pro), விவோ டி2எக்ஸ் (Vivo T2x), போக்கோ எக்ஸ்5 (Poco X5), ரெட்மி 12 (Redmi 12), சாம்சங் கேலக்ஸி எப்34 (Samsung Galaxy F34) போன்ற ஸ்மார்ட்போன்களுக்கும் Flipkart Republic Day Sale 2024 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். உதாரணமாக ஐபோன் 15 பேஸிக் 128GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் ரூ.72,999/-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது ரூ.79,900/- என்ற விலையில் அறிமுகமானது. ஐபோன் 15 Republic Day Sale 2024 சிறப்பு தள்ளுபடி விலையில் ரூ.6,901/- என்ற குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது.
Latest Slideshows
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்