Floating Solar Power Plant : மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம்

Floating Solar Power Plant

நிலப் பகுதியில் செய்யக்கூடிய சோலார் மின் உற்பத்தி (Floating Solar Power Plant) திட்டத்தை  தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை உக்கடம் பெரிய குளத்தில் உள்ள நீரில்  அமைகிறது. கோவை உக்கடத்தில் உள்ள பெரிய குளத்தில் நாளொன்றுக்கு, 693 யூனிட் மின்னுற்பத்தி  செய்யக்கூடிய ‘மிதக்கும் சோலார்’ நிலையம்  ஆனது, 50 சென்ட் நீர் பரப்பில், 1.45 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து தூதரகம் ஆனது  இந்த ‘மிதக்கும் சோலார்’ திட்டத்திற்கு ரூ.72.50 லட்சத்தை 50 சதவீத பங்களிப்பாக  வழங்குகிறது. தமிழக அரசு மீதமுள்ள, 50 சதவீதத்தை வழங்குகிறது. தற்பொழுது முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

1.45 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் Floating Solar Power Plant

சோலார் பேனல்களை உக்கடம் பெரியகுளத்துக்குள் (Floating Solar Power Plant) மிதக்க விடும் பணிகளானது துவங்கப்பட்டுள்ளது. இதற்காக,  1.45 கோடி ரூபாய் மதிப்பில் 280 சோலார் தகடுகள் 50 சென்ட் நீர் பரப்பில்  மிதக்க விடப்பட்டுள்ளன. ஆங்கரிங் முறையில் சோலார் பேனல்கள் மிதக்க விடப்பட்டுள்ளன. சோலார் பேனல்களானது குளத்தில் தண்ணீர் குறையும் போது கீழே செல்லும் வகையிலும், அலையடித்தாலும் எந்த சேதமும் ஏற்படாத வகையிலும் பொருத்தப்பட்டு மிதக்க விடப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெர்மனி நாட்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு செயல்படுகிறது.

இதுவரை, 60 சதவீத பணிகள் ஆனது முடிவடைந்துள்ளது. மின் இணைப்பு வழங்கும் பணிகள் ஆனது நடந்து வருகிறது. தொடர்ந்து டிரான்ஸ்பார்மர், மற்றும் இன்வெர்ட்டர் அமைக்கும் பணிகள் ஆனது நடைபெற உள்ளது. இந்தப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைய இன்னும் இரு மாதங்களாகும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெர்மனி நாட்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு செயல்படுகிறது.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உரை

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,  கோயம்புத்தூர் மாநகராட்சியும், ஜெர்மன் நாட்டு நிறுவனமும் இணைந்து இந்த ‘மிதக்கும் சோலார்’ திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. ரூ1 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சோலார் `மிதக்கும் சோலார்’ மின் உற்பத்தி நிலையம்  (Floating Solar Power Plant) மூலம் 154 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க முடியும்.

 இந்த மின்சக்தியை உருவாக்கும் வழிமுறை என்பது மின்சாரத்திற்கு ஆகும் செலவை விட குறைவானதாகும். தற்பொழுது முதல் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு மாதங்களில் இந்த சோலார் `மிதக்கும் சோலார்’ மின் உற்பத்தி நிலையம்  (Floating Solar Power Plant) செயல்பாட்டிற்கு வரும்,” என்றார்.

Latest Slideshows

Leave a Reply