Flood Relief Token : புயல் நிவாரண தொகை ரூ.6000-கான டோக்கன் 14/12/2023 இன்று முதல் வழங்கப்பட உள்ளது

தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் குறிப்பிட்ட சில வட்டங்களிலும்  பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6000/ வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் ஆகியோருக்கு முன்மொழிவுகளை அனுப்பினார். தற்போது மிக்ஜாம் புயல் நிவாரண தொகை ரூ.6000-கான டோக்கன் (Flood Relief Token) 14/12/2023 இன்று முதல் சென்னையில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Flood Relief Token - ரூ.6000 நிவாரணத்திற்கான டோக்கன் குறித்து மக்கள் அறிய வேண்டியவை :

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சில பகுதிகளில் ATM மையங்கள் இயங்காததாலும், பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும் மற்றும் பாதிக்கப்பட்ட பலர் தங்களது ATM அட்டை. வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத்தொகை ரூ.6000 ரொக்கமாக வழங்கலாம் என தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டு தமிழக அரசு சார்பில் அரசாணை ஆனது வெளியிடப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட/ இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள்/ பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக டோக்கன் (Flood Relief Token) வழங்கும் முறையை பின்பற்றி ரூ.6000/- வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசு/ மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், குடும்ப அட்டைதாரர்கள் இந்த மிக்ஜாம் புயலால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கி கணக்கு விவரத்துடன் தங்கள் பாதிப்புக்குரிய நியாயவிலை கடைகளில் விண்ணப்பிக்கலாம். அவர்களது விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் ஆனது அவர்களின் வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்படும்.

இது சம்பந்தபட்ட தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் நியாய விலைக்கடைகளில் தேவையான அளவு அமைத்திட கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர், மேலாண்மை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். கூட்டுறவு சங்கப்பதிவாளர், நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நியாய விலைக்கடைகளில் விண்ணப்பங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூட்ட நெரிசல்கள் நியாய விலைக்கடைகளில் ஏற்படுவதைத் தடுக்க காவல்துறையுடன் இணைந்து மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6000 நிவாரண தொகை வழங்கப்பட உள்ள பகுதிகளின் விவரம் :

  • சென்னை மாவட்டம் – அனைத்து வட்டங்கள்.
  • செங்கல்பட்டு மாவட்டம் – தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்.
  • காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்.
  • திருவள்ளூர் மாவட்டம்: (1) பொன்னேரி (2) கும்மிடிப்பூண்டி, (3)ஆவடி, (4) பூவிருந்தவல்லி (5) ஊத்துக்கோட்டை (6) திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள்.

Flood Relief Token - ரூ.6000 நிவாரணத்திற்கான டோக்கனில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் :

  • கடையின் பெயர்.
  • குடும்ப அட்டைதாரர் பெயர்.
  • குடும்ப அட்டை எண்.
  • நாள் மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply