Food Grain Production : உணவு தானிய உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது

Food Grain Production - உணவு தானிய உற்பத்தியில் இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளது :

சுமார் 76 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாடு தனது அன்றாட உணவுத் தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்திருந்தது. இன்று இந்திய நாடு ஆனது உணவு பற்றாக்குறையில் சிக்கி சிரமத்தில் தவிக்கும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது. 1947-ம் ஆண்டு மொத்த இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1% ஆக இருந்தது. தற்பொழுது இது 7.5% மேலாக உயர்ந்துள்ளது. 1950-ல் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி ஆனது 50 மில்லியன் டன்னாக இருந்தது. இன்று இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி ஆனது 330 மில்லியன் டன்னைக் கடந்துள்ளது. இந்தியா உணவு தானிய உற்பத்தியில் (Food Grain Production) தன்னிறைவு பெற்றதோடு மட்டுமல்லாமல், அதன் ஏற்றுமதியிலும் ஒரு முக்கிய நாடாக உள்ளது. உலக அளவில் இந்தியா பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது.

இந்தியா சுதந்திரமடைந்தபோது அந்நிய செலாவணி கையிருப்பு ஆனது வெறும் ரூ.1,029 கோடிதான் இருந்தது. இந்தியா மக்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்துதான் உதவி பெற்று வந்தது. இன்று அந்நிய செலாவணி கையிருப்பு ஆனது ரூ.45.35 லட்சம் கோடிக்கும் மேலாக உள்ளது. இந்தியாவில் 1948-ல் அந்நிய முதலீடு ஆனது ரூ.256 கோடியாக இருந்தது. இன்று இந்தியாவில் அந்நிய முதலீடு ஆனது அது ரூ.6.5 லட்சம் கோடிக்கும் மேலாக உள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளது. உலகளவில் இந்தியா நான்கில் ஒரு பங்கு வளங்களை (Food Grain Production) கொண்டுள்ளது.

இந்தியா உணவு தானிய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் (Food Grain Production) உள்ளது. பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் இந்தியா பெரிய மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் உலகளவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவான புதிய பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உள்கட்டமைப்பு ஆனது மிகப்பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி உள்ளது. வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட் துறையில் நல்ல வளர்ச்சி அடையத் தொடங்கி உள்ளது. தற்போது பணவீக்கம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு ஆகிய பல விதமான நெருக்கடிகளுக்கு மத்தியிலும், உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கின்றது. குறிப்பாக இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில் நம் நாடு ஆனது செல்வ செழிப்பு மிக்க நாடாக வளர்ந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply