Forbes India Rich List 2023 : Forbes பணக்காரர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் கே.பி.ராமசாமி

Forbes India Rich List 2023- இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் கே.பி.ராமசாமி 19,152 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 100வது இடத்தை (Forbes India Rich List 2023) பிடித்துள்ளார் (அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் 2.30 பில்லியன்). இந்த 100 பணக்காரர்கள் பட்டியலில் (Forbes India Rich List 2023) ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தையும், கவுதம் அதானி இரண்டாவது இடத்தையும், ஷிவ் நாடார் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த கே.பி.ராமசாமி அவர்கள் ஜவுளி மற்றும் சர்க்கரை உற்பத்தியாளர் மற்றும் K.P.மில்ஸ் நிறுவனர் ஆவார்.

Forbes பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் கே.பி.ராமசாமி

கடந்த 1984ம் ஆண்டு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ராமசாமி K.P.R.மில்லை நிறுவினார். 2013ம் ஆண்டில் சர்க்கரை ஆலையை 2013ம் ஆண்டும், ‘Faso’ என்ற பெயரில் ஆண்களுக்கான உள்ளாடைகள் தயாரிப்பை 2019ம் ஆண்டும் தொடங்கினார். 30,000 பேர், ராமசாமி மற்றும் அவரது இரு சகோதரர்களால் நடத்தப்படும் இந்த நிறுவனங்களில், வேலை பார்க்கின்றனர். இதில் 90% பேர் பெண்கள் ஆவார். இந்த K.P.R.மில் ஆனது கோயம்புத்துாரில் அமைந்துள்ளது. இந்த  K.P.R.மில்லில் பருத்தி, பாலியஸ்டர் நூல் உற்பத்தி மற்றும் பின்னலாடைகள், செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் 128 மில்லியன் ஆடைகளை கேபிஆர் மில் ஆனது உற்பத்தி செய்கிறது. விளையாட்டு உடைகள் முதல் தூங்கும்போது அணியும் ஆடைகள் வரை கேபிஆர் மில் ஆனது உற்பத்தி செய்கிறது. இந்த ஆடைகள் H & M, மார்க்ஸ் & Spencer மற்றும் Walmart போன்ற ஜாம்பவான்களின் ஆடை ரேக்குகளில் இடம்பெறுகின்றன.
எத்தனால் மற்றும் சர்க்கரை ஆனது ராமசாமி அவர்களது சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. பல காற்றாலைகளை ராமசாமி தமிழகத்தில் நிறுவியுள்ளார். கர்நாடகாவில் ‘கோஜென் கம் சுகர்’ என்ற ஆலையை நிறுவியுள்ளார்.

கே.பி.ராமசாமி அவர்கள் ‘K.P.R அறக்கட்டளை’ என்ற பொது அறக்கட்டளையை நிறுவி உள்ளார். இந்த  ‘K.P.R அறக்கட்டளை’ ஆனது அதன் கல்வி நிறுவனமான ‘K.P.R Institute Of Engineering & Technology’ மூலம் கல்வியை வழங்குகிறது. பெருந்துறைக்கு அருகே உள்ள குக்கிராமத்தில் பிறந்த கே.பி.ராமசாமி அவர்கள் அரசு பள்ளியில் படித்தார். விவாசயத் தொழிலிலும் ஈடுபட்டு அதில் நலிவடையவே அடுத்து சில தொழில்களில் ஈடுபட்டார். விசைத்தறி துறையில் அடியெடுத்து வைத்து இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார். அவரது விடாமுயற்சியும் உழைப்பும்தான் இதற்கு காரணம் என்றால் அது மிகையல்ல.

Latest Slideshows

Leave a Reply