Forbes List Of The World's Richest People : இந்தியாவைச் சேர்ந்த குன்ஹி கண்ணன் இணைந்துள்ளார்

Kunhi Kannan From India Joined The Forbes List Of The World's Richest People :

இந்தியாவைச் சேர்ந்த குன்ஹி கண்ணன்  அமெரிக்காவின் Forbes பத்திரிக்கை வெளிட்ட பில்லியனர் பட்டியலில், எலான் மஸ்க், முகேஷ் அம்பாணி, ஜெப்பியாஸ் இவர்களின் வரிசையில் (Forbes List Of The World’s Richest People) இடம் பெற்றுள்ளார். குன்ஹி கண்ணன் என்பவர் மிக குறுகிய காலத்தில் உலக பில்லியனர்களில் ஒருவராகி உலகப்பணக்காரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இந்த 60 வயது நிறைந்த குன்ஹி கண்ணன், மைசூரில் உள்ள கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா நிறுவனத்தின் உரிமையாளார் ஆவார். இவர் தனது Electronic Engineering படிப்பை  மைசூரில் உள்ள National Institute Of Engineering-ல் முடித்தவர். 

Kaynes Technology நிறுவனம் தான் கடந்த 2023-ஆம் ஆண்டு ISRO-வால் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3ல், ரோவர் மற்றும் லேண்டர் இரண்டையும் இயக்குவதற்கு பயன்படுத்தப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்புகளை வழங்கியது. கடந்த 2023-ஆம் ஆண்டு சந்திரயான் 3-ன் வெற்றியைத் தொடர்ந்து இந்த Kaynes Technology நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் 40 மடங்கு வளர்ச்சியடைந்து  உள்ளது. இந்த Kaynes Technology நிறுவனத்தின் 64 சதவிகித பங்குகள் ஆனது குன்ஹி கண்ணன் வசம் உள்ளது. இதன் மூலம் இவரின் நிகர சொத்தின் மதிப்பு ஆனது 1.2 பில்லியன் டாலராக உயர்ந்து உலக பணக்காரர்களின் தரவரிசை பட்டியலில் இவர் பெயரும் (Forbes List Of The World’s Richest People) இடம்பெற்றுள்ளது.

Kaynes Technology நிறுவனம் - ஓர் குறிப்பு :

குன்ஹி கண்ணன் Kaynes என்ற நிறுவனத்தை 1988ல் சிறிய அளவில் தொடங்கினார். இவரது Kaynes நிறுவனமானது,1996-ஆம் ஆண்டு பங்கு வர்த்தகத்தில் 3% வளர்ச்சியைக் கண்டது. குன்ஹி கண்ணனின் மனைவி சவிதா ரமேஷ்ஸும் Kaynes நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார். இந்த Kaynes Technology நிறுவனம் ஆனது 137 மில்லியன் டாலர் அளவிலான வருடாந்திர வருவாயிணை பெற்று வருகிறது. இந்த வருவாயில் 50 சதவீதத்திற்கு மேல் PCB எனப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கிறது. மேலும் ஆட்டோமொபைல், விண்வெளி, மருத்துவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு தேவையான மின்னணு அமைப்புகள் மற்றும் டிசைன் சேவைகளை இந்த Kaynes Technology  நிறுவனம் ஆனது வழங்குகிறது. Kaynes Technology நிறுவனத்தின் தயாரிப்புகள் முக்கியமாக எலக்ட்ரிக் வாகனங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ரயில்வே சிக்னல்களில் பயன்படுத்தப்படுகின்றன.

Latest Slideshows

Leave a Reply